பெரிய ஹீரோக்களை திரும்பி பார்க்க வைத்த 2023ன் 6 அறிமுக இயக்குனர்கள்..

Tamil Directors: 2023ஆம் ஆண்டில் வெளியான இளம் நடிகர்களின் படங்கள் முதல் முன்னணி நடிகர்களின் படங்கள் வரை ஏராளமான திரைப்படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. அந்த வகையில் 2023ஆம் ஆண்டில்  பல புதுமுக இயக்குனர்களும் அறிமுகமாகி இருக்கின்றார்கள். அப்படி கடந்த ஆண்டில் பெரிய ஹீரோக்களை திரும்பி பார்க்க வைத்த ஆறு அறிமுகம் இயக்குனர்கள் குறித்து பார்க்கலாம்.

கணேஷ் பாபு: கவின் நடிப்பில் வெளியாகிய பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம் தான் டாடா இத்திரைப்படத்தினை கணேஷ் பாபு இயக்கியிருந்தார். டாடா பிளாக் பஸ்டர் ஹிட் அடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது.

ரவி முருகையா: வித்தார்த் நடிப்பில் கடைசியாக வெளியான ஆயிரம் பொற்காசுகள் திரைப்படத்தினை இயக்கியவர் தான் ரவி முருகையா இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது.

அமிர்தாவை வைத்து கணேஷ் மனதை மாற்ற பிளான் போட்ட ராதிகா.. களமிறங்கும் குடும்பம் – பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட்

விக்னேஷ் ராஜா: சரத்குமார், அசோக் செல்வன் கூட்டணியில் வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்ற போர் தொழில் படத்தின் இயக்கியவர் தான் விக்னேஷ் ராஜா.

மந்திரமூர்த்தி: சரத்குமார் நடிப்பில் வெளியாகி வெற்றினை கண்ட அயோத்தி படத்தினை இயக்கியவர்தான் மந்திரமூர்த்தி இவருக்கும் தமிழ் சினிமாவில் நல்ல எதிர்காலம் உள்ளது.

விநாயக் சந்திரசேகர்: மணிகண்டன், மீதா ரகுநாத் நடித்திருந்த குட் நைட் படம் குறைவான பட்ஜெட்டில் உருவாகி பல கோடி வசூல் செய்தது. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் குட் நைட் படுத்தினை இயக்கியவர் தான் விநாயக் சந்திரசேகர்.

சிவகார்த்திகேயனின் “அக்கா குடும்பத்தை” பார்த்து உள்ளீர்களா.? லைக்குகளை குவிக்கும் புகைப்படம்

ராம்குமார் பாலகிருஷ்ணன்: கடைசியாக ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியாகி அனைவர் வாழ்க்கையிலும் அன்றாடம் நடக்கும் கூடிய பார்க்கிங் பிரச்சனையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட பார்க்கிங் படத்தினை இயக்கி சிறந்த அறிமுக இயக்குனராக ராம்குமார் பாலகிருஷ்ணன் உள்ளார்.