தனது அப்பாவிடம் சபதம் போட்ட விஜயகாந்த்.. உதவுவதற்கு பின்னால் இப்படி ஒரு கதை உள்ளதா.!

Captain Vijayakanth: நடிகர் விஜயகாந்த் கொரோனா தொற்று ஏற்பட்டதால் சிகிச்சை பலனின்றி இன்று தனது 71வது வயதில் காலமாகியுள்ளார் இது திரையுலகினர்கள் மட்டுமல்லாமல் ரசிகர்களையும் சோகத்தில் வாழ்த்தி உள்ளது. இவருடைய தங்கமான குணத்தினால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கட்டி போட்டார்.

மதுரையில் பிறந்த விஜயகாந்த் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையோடு தனது நண்பரின் உதவியுடன் சென்னைக்கு வந்தார். பல கஷ்டங்களை சந்தித்தாலும் சினிமாவில் தனக்கான அந்தஸ்தை பிடித்த விஜயகாந்த் தொடர்ந்து வெற்றி திரைப்படங்களை தந்தார். ரஜினி, கமல் என அனைவரையும் ஓவர் டெக் செய்த விஜயகாந்த் ஒரு வருடத்திற்கு 10 முதல் 18 படங்கள் வரை நடித்து அசத்தார்.

தனது நண்பர் இப்ராஹிம் ராவுத்தர் உதவியுடன் வெற்றியை கண்டு வந்த விஜயகாந்த் தமிழ் சினிமாவில் இன்றுவரையிலும் நட்புக்கு இலக்கணமாக இவர்கள் உள்ளனர். விஜயகாந்த் நடிப்பதன் மூலம் கிடைக்கும் பணங்களை வைத்து பல உதவிகளை செய்தார். இவ்வாறு இவர் பல உதவிகளை செய்வதற்கு அவருடைய அப்பா தான் காரணம் என கூறப்படுகிறது.

தங்கமான ராசாவை இழந்து விட்டோம். உயிரிழப்பு மன வேதனையில் இரங்கல் தெரிவித்த சினிமா பிரபலங்கள்…

அதாவது விஜயகாந்துக்கு 14 அல்லது 15 வயது இருக்கும் பொழுது அவரது தந்தை ஆசை ஆசையாக தங்க சங்கிலி ஒன்றை போட்டு விட்டிருக்கிறார். அந்த சமயத்தில் தனது மில்லில் வேலை பார்க்கும் ஒருவரின் மகன் அங்கு வந்திருக்கிறார் அந்த சிறுவனும் மில்லில் வேலையை கவனிக்க தொடங்கியுள்ளார். இதனைப் பார்த்த விஜயகாந்த் அந்த சிறுவனின் தந்தையிடம் ஏன் இவர் படிக்க போகவில்லையா என கேட்டிருக்கிறார் அதற்கு அவர் இல்லை அந்த அளவுக்கு வசதி இல்லை என சொல்ல உடனடியாக விஜயகாந்த் தனது தங்க சங்கிலியை கழற்றி அவரிடம் கொடுத்து இதை அடகு வைத்தாவது அவரை படிக்க வையுங்கள் என்று கொடுத்துவிட்டு சென்றிருக்கிறார்.

சில நாட்கள் கழித்து விஜயகாந்தின் தந்தை விஜயகாந்தின் கழுத்தை கவனிக்க தங்கச் சங்கிலி இல்லை உடனே எங்கே சங்கிலி என கேட்க அதற்கு விஜயகாந்த் சமாளித்திருக்கிறார் ஆனால் விடாத அப்பா பலமாக அடிக்க ஒரு கட்டத்தில் வலி தாங்க முடியாத விஜயகாந்த் உண்மையில் என்ன நடந்தது என்பதை கூற அதற்கு விஜயகாந்த் அப்பாவோ நீ உதவு நல்ல குணம் தான் ஆனால் உன் சம்பாதியத்தில் வரும் காசை வைத்து உதவு அடுத்தவர் காசில் உதவாதே என்று சொல்லி இருக்கிறார்.

கருப்பு எம்ஜிஆர்-னா சும்மாவா.. சாப்பாடு தராமல் அவமதிக்கப்பட்ட கேப்டன்.! கடைசியில் வயிறார சாப்பாடு போட்டு அழகு பார்த்த மனுஷன்

எனவே இதனை அடுத்து விஜயகாந்த் தந்தையிடம் இனி நான் எப்போ சம்பாதிக்கிறேனோ அப்பதான் தங்கத்தை அணிவேன். அதே போல் எவ்வளவு சம்பாதித்தாலும் உதவுவேன் என சபதம் எடுத்தாராம் அதன்படி தான் சம்பாதித்த பிறகு தங்க சங்கிலியை அணிந்தாராம் விஜயகாந்த்.