தங்கமான ராசாவை இழந்து விட்டோம். உயிரிழப்பு மன வேதனையில் இரங்கல் தெரிவித்த சினிமா பிரபலங்கள்…

vijayakanth passed kushboo tweet : விஜயகாந்த் உயிரிழந்த செய்தியை கேட்டு ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமும் சோகத்தில் மூழ்கி அதிர்ச்சியில் இருக்கிறது. பிரபலங்கள் முதல் ரசிகர்கள் தொண்டர்கள் என அனைவரும்கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். விஜயகாந்த் சில வாரங்களுக்கு முன் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அவருக்கு சளி காய்ச்சல் தொல்லை இருந்ததால் சிகிச்சை பெற்று வந்தார்.

பிறகு உடல் நலம் தேறி வீட்டிற்கு வந்த விஜய்காந்த் தொண்டர்களையும் சந்தித்தார் அதுமட்டுமில்லாமல் நன்றாக இருந்த விஜயகாந்த் திடீரென மீண்டும் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் மருத்துவமனையில் இருந்த விஜயகாந்த் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது உடனே அவருக்கு வெண்டிலேஷன் மருத்துவம் சிகிச்சை கொடுக்கப்பட்டது.

வரலாற்று சாதனை படைத்த நடிகர் விஜயகாந்த்.. ஒரே ஆண்டில் இதனை படங்களா?

ஆனால் சிகிச்சை பலனின்றி விஜயகாந்த் திடீரென உயிரிழந்தார். நடிகர் விஜயகாந்த் கருப்பு நிலா, வீர விளைஞ்ச மண்ணு, சிம்மாசனம் ஆகிய திரைப்படங்களில் குஷ்பு உடன் இணைந்து நடித்துள்ளார் இந்த நிலையில்  முதல் ஆளாக குஷ்பூ விஜய்காந்தின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

அரசியலில் களம் கண்ட விஜயகாந்த் அதிரடியாக வெற்றிகளை ருசித்து வந்தார் ஆனால் அவரின் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் அவருடைய தேமுதிகவும்  சரியத் தொடங்கியது விஜயகாந்த் எப்படி யாவது மீட்டு விட வேண்டும் என வெளிநாட்டில் உள்ள மருத்துவம் மியாட்டில் மருத்துவம் என அவரது குடும்பத்தினர் இரவு பகல் பார்க்காமல் பாதுகாத்து கவனித்து கொண்டார்கள். ஆனாலும் அவர்களின் முயற்சிக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது.

விஜயகாந்த் இறப்பிற்கு காரணம் இதுதானா… வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்..

71 வயது மதிக்கத்தக்க விஜயகாந்த் மூச்சு விட சிரமப்பட்டு காலமானார் இதனால் குஷ்பூ தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு சொக்க தங்கத்தை இழந்துவிட்டோம் சினிமாவிலும் கட்சி பணியிலும் அவரது உழைப்பு ஈடுபாடும் சொல்லில் அடங்காது அந்த அளவு உழைத்த நபர் உடல் உபாதைகள் காரணமாக சிரமப்பட்டு வந்த நிலையில் நிம்மதியாக ஓய்வெடுக்க நம்மை விட்டு பிரிந்து விட்டார் அவரின் இழப்பு தமிழ்நாட்டுக்கு மட்டுமல்லாமல் தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் மக்களுக்கு மிகப்பெரிய இழப்பாக கருதப்படுகிறது என குஷ்பு தெரிவித்துள்ளார்.