கருப்பு எம்ஜிஆர்-னா சும்மாவா.. சாப்பாடு தராமல் அவமதிக்கப்பட்ட கேப்டன்.! கடைசியில் வயிறார சாப்பாடு போட்டு அழகு பார்த்த மனுஷன்

Captain Vijayakanth: கேப்டன் விஜயகாந்த் 71 வயதில் உடல்நிலை குறைவு காரணமாக உயிரிழந்தார். இந்த செய்தி தமிழக முழுவதையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழ் திரைவுலகின் கருப்பு எம்ஜிஆர் என கொண்டாடப்படும் விஜயகாந்த் அனைவருக்கும் சாப்பாடு போட்டு பாசம் காட்டுவதில் சொக்கத்தங்கம் என ஏராளமான பிரபலங்கள் கூறி நாம் கேட்டிருக்கிறோம்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கலக்கி வந்த கேப்டன் விஜயகாந்த் வில்லனாக அறிமுகமாகி தனது கடின உழைப்பினால் ஹீரோவாக மாஸ் காட்டி வந்தார். அப்படி இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்க தொடங்கியதால் ஒரு வருடத்திற்கு 10 முதல் 18 படங்கள் வரை நடித்து வரலாற்று சாதனை படைத்தார்.

விஜயகாந்த் இறப்பிற்கு காரணம் இதுதானா… வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்..

கமல்ஹாசனுக்கு போட்டியாக இருந்து வந்த விஜயகாந்த் மதுரையில் பிறந்தவர் வசதியான குடும்பத்தைச் சேர்ந்த இவர் ஹீரோவாக வேண்டும் என பல தடைகளையும் அவமானங்களையும் தாண்டி உச்சத்தை தொட்டார். மிகவும் எளிமையாக இன்முகத்தோடு பழகக்கூடிய விஜயகாந்த் தன்னை சந்திக்க வரும் யாராக இருந்தாலும் வயிறார சாப்பாடு போட்டு அனுப்புவார்.

தன்னை சந்திக்க வந்தவர்கள் வெறும் வயிற்றோடு செல்லக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பாராம். அதேபோல் ராமநாதபுரம் தோட்டத்திலிருந்து எம்ஜிஆரை சந்திக்க செல்லும் பொழுது யாரும் சாப்பிடாமல் வெளியே செல்ல முடியாதாம். யாராக இருந்தாலும் முதலில் சாப்பிட்டு விட்டீர்களா என்று கேட்டுவிட்டு வயிறார உணவு கொடுப்பது எம்ஜிஆரின் பழக்கம்.

எனவே இதன் காரணமாக ராமநாதபுரம் தோட்டத்தில் எப்பொழுதும் உணவு சமைத்துக் கொண்டே இருப்பார்களாம் அதன் பின்னர் விஜயகாந்த் தான் இவ்வாறு செய்ததாகவும் எனவே விஜயகாந்தை கருப்பு எம்ஜிஆர் என போற்றியுள்ளனர். அதாவது சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் விஜயகாந்த் கருப்பாக இருந்ததால் படப்பிடிப்பு தளங்களில் யாருமே இவரை மதிக்க மாட்டார்களாம்.

விஜயகாந்த் இறப்பிற்கு காரணம் இதுதானா… வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்..

பெரிய ஹீரோயின்களுக்கு ஜோடியாக நடிக்கும் பொழுது விஜயகாந்துக்கு மரியாதை கொடுக்கப்படவில்லை எனவும் ஹீரோவாக இருந்தாலும் விஜயகாந்துக்கு மரியாதை கிடைக்கவில்லை என்பதால் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது கூட பாதியிலேயே எழுப்பி நடிக்க சொல்வார்கள் எனவும் கூறப்படுகிறது.

மேலும் ஹீரோயினுக்கு ஸ்பெஷல் சாப்பாடு விஜயகாந்த் சாதாரண சாப்பாடு என வித்தியாசமாக நடத்தியுள்ளனர். இதனால் வருத்தப்பட்ட விஜயகாந்த் முன்னணி நடிகராக மாறியவுடன் அனைவருக்கும் ஒரே மாதிரியான சாப்பாடு கொடுக்க வேண்டும் என தயாரிப்பாளriடம் கண்டிஷன் போட்டுள்ளார். நான் என்ன சாப்பிடுகிறனோ அதையேதான் அனைவரும் சாப்பிட வேண்டும் என கூறியுள்ளார்.

இவ்வாறு தன்னை பார்க்க வரும் நடிகர்கள், நடிகைகள், ரசிகர்கள் என அனைவரையும் சாப்பிட வைத்து தான் அனுப்புவாராம். எனவே விஜயகாந்த் அலுவலகத்தில் எப்பொழுதும் உணவு சமைத்துக் கொண்டே இருப்பார்களாம் ஏராளமான இயக்குனர்கள், நடிக்க சான்ஸ் தேடி சென்னை வருபவர்கள் என ஆயிரம் கணக்கானவர்கள் விஜயகாந்த் அலுவலகத்திற்கு சென்றால் சாப்பாடு கிடைக்கும் என்று நம்பிக்கையோடு அங்கு சென்று சாப்பிட்டவர்களும் இருப்பதாக கூறப்படுகிறது.