வேட்டையாட ஆரம்பித்த விஜயகாந்த்.. உச்சகட்ட மகிழ்ச்சியில் தொண்டர்கள் , ரசிகர்கள் வைரலாகும் வீடியோ

Vijayakanth : எம்ஜிஆர் – சிவாஜி, ரஜினி – கமலுக்கு அடுத்து சினிமாவில் கொண்டாடப்பட்ட நடிகர் விஜயகாந்த் முதலில் கிராமத்து கதையை அம்சம் உள்ள படங்களில் நடித்து வெற்றிகளை குவித்த இவர் அதன் பிறகு ஆக்சன் என அனைத்து தரப்பட்ட படங்களிலும் நடித்து அசத்தினார். சினிமாவில் வெற்றி மட்டுமே கண்டு வந்த இவர் விருதகிரி படத்திற்கு பிறகு அரசியலில் களம் இறங்கினார்.

ஆரம்பத்திலிருந்து தன்னுடைய கட்சியை உயர்த்திக் கொண்டே போய் ஒரு கட்டத்தில் எதிர்கட்சி தலைவராக விஜயகாந்த் அரியணை ஏறினார் அதன் பிறகு முதலமைச்சராக வருவார் என அவருடைய தொண்டர்களும், ரசிகர்களும் எதிர்பார்த்த நிலையில் அவருக்கு உடல் நலம் சரியில்லாததால் ஓய்வு எடுத்து வந்தார்.

எந்த கொடியும், ஸ்டிக்கரும் பயன்படுத்தாமல் மக்களுக்கு உதவி செய்த நடிகர்.. புகழ்ந்து தள்ளிய பயில்வான்

திடீரென கடந்த மாதம் ரொம்ப முடியாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் விஷயத்தை கேள்விப்பட்டார் ரசிகர்கள், சினிமா பிரபலங்களும் அவரைப் பார்க்க குவிந்தனர் ஆனால் அனுமதிக்கப்படாததால் விஜயகாந்த் சீக்கிரம் மீண்டு வர வேண்டுமென ரசிகர்கள் ஒரு பக்கம் வேண்டிக் கொள்ள பிரபலங்கள் விஜயகாந்த் பற்றி தொடர்ந்து பேசினார்.

அப்படி ராதாரவி, எம் எஸ் பாஸ்கர் என பல பிரபலங்கள் விஜயகாந்தின் ஆரம்ப காலத்திலிருந்து நாங்கள் இருக்கிறோம் அவர்  சினிமாவில் தான் மட்டும் வளராமல் எங்களையும் வளர்த்து விட்டார். பலருக்கும் காசுகளையும், சாப்பாடுகளையும் மற்றவர்களையும் வளர்த்து விட்ட விஜயகாந்த் இப்படி உடல்நலம் சரியில்லாமல் இருப்பது எங்களுக்கு வேதனையாக இருக்கிறது நிச்சயம் அவர் மீண்டு வர வேண்டுமென கூறினார்கள்.

பிறந்த வீட்டு கஷ்டத்தை போக்க மண் மிதித்து வேலை செய்த மகா.. அதை வீடியோ எடுத்த கௌதம், சித்ராதேவி – ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோட்

அவர்கள் வேண்டுகோள் பலித்து விட்டது விஜயகாந்த் சமீபத்தில் உடல் நலம் பெற்று வீடுக்கு வந்தார் ஆனால் அவர் தற்பொழுது எப்படி இருக்கிறார் என்பதை தெரிந்து கொள்ள தொண்டர்களும், சினிமா பிரபலங்களும் ஆர்வம் காட்டிவந்த நிலையில் தேதிமுக தலைவர் விஜயகாந்த் கட்சியின் பொதுக்குழுவில் கலந்து கொண்டார் அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் வீடியோக்கள் சோசியல் மீடியா பக்கத்தில் வைரல் ஆகி வருகிறது.