வளர முடியாமல் தத்தளித்த 5 நடிகர்களை தூக்கிவிட்ட விஜயகாந்த்.. சூர்யாவுக்கு பக்கபாலமாக நின்ற கேப்டன்

Vijayakanth : கேப்டன் விஜயகாந்த் சினிமாயுலகில் தான் மட்டும் வளராமல் தன் கூட இருந்தவர்களையும் வளர்த்து விட்டார் அதேபோல சினிமாவில் வளர போராடிக் கொண்டிருந்த பல நடிகர், நடிகைகளையும் சப்போர்ட் பண்ணி தூக்கி விட்டுள்ளார். அப்படி விஜயகாந்த் தூக்கி விட்ட 5 ஹீரோக்களை பற்றி இங்கு பார்ப்போம்..

செந்தூரப்பாண்டி : 1993 ஆம் ஆண்டு விஜயகாந்த் நடிப்பில் எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் விஜயகாந்த் உடன் இணைந்து கௌதமி, யுவராணி, விஜய் மற்றும் பலர் நடித்திருப்பார்கள் இந்த படத்தில் விஜய்க்கு அண்ணனாக விஜயகாந்த் நடித்திருப்பார்.  படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது.

ஒரே நேரத்தில் இருவருக்கு காதல் வலையை வீசிய சூனியக்காரி.! தினேஷை பழி வாங்க தான் இந்த நார வேலையா..

பெரியண்ணா : 1999 ஆம் ஆண்டு எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் விஜயகாந்த் நடிப்பில் உருவான இந்த திரைப்படத்தில் சூர்யா, மீனா, மானசா மற்றும் மனோகர் அம்மா என பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்திருப்பார்கள்.  படத்தில் சூர்யா காதலித்து கொண்டிருப்பார் அப்பொழுது சில பிரச்சனைகள் வரும் அதற்காக விஜயகாந்த்  இடத்திற்கு ஓடி வருவார் அதன் பிறகு நடக்கும் ஆக்சன், எமோஷனல் தான் படம்.. படம் சிறப்பாக இருந்ததால் பெரிய ஹிட் அடித்தது.

ஊமை விழிகள் : 1986 ஆம் ஆண்டு அரவிந்த்ராஜ் இயக்கத்தில் விஜயகாந்த் நடிப்பில் வெளியான இந்த படத்தில் ஆரம்பத்தில் மர்மமான முறையில் பலர் இறந்து போவார்கள் அதை விஜயகாந்த் கண்டுபிடிப்பார் படம் பெரிய ஹிட் அடித்தது இந்த படத்தில் விஜயகாந்த் உடன் இணைந்து அருண்பாண்டியன், சந்திரசேகர், ஜெய் சங்கர், ரவிச்சந்திரன், கார்த்திக் என பலர் நடித்திருப்பார்கள்.

பிக் பாஸ் வீட்டில் முளைத்த அடுத்த காதல்.. மாயாவுக்கு ஆப்பு வைத்த பூர்ணிமா.! ஒருவேளை இதுவும் கண்டென்டா?

செந்தூரப்பூவே  :  1988 ஆம் ஆண்டு பி ஆர் வேதராஜ் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்தில் விஜயகாந்த், ராம்கி, நிரோஷா மற்றும் பலர் நடித்திருப்பார்கள் படம் ஆக்சன் மற்றும் எமோஷனல் கலந்த படமாக இருந்ததால் 200 நாட்களுக்கு மேல் ஓடி வெற்றி பெற்றது.

என் ஆசை மச்சான் : ஆர் சுந்தர்ராஜன் இயக்கத்தில் விஜயகாந்த் நடிப்பில் வெளியானது. இந்த படத்தின் கதை..  தம்பியின் காதலை சேர்த்து வைக்கும் பொறுப்பில் அண்ணனாக அவருடைய பொறுப்பை சரியாக செய்வார் படம் சூப்பர் ஹிட் அடித்தது. இதில் வரும் பாடல்களும் இன்றளவும் பேசப்படுகிறது.