இந்த விளம்பரத்தில் நடிக்க ஒரு கோடி கொடுத்தும் மயங்காத விஜயகாந்த்.. மக்கள் நலனுக்காக நிஜ வாழ்க்கையிலும் கருப்பு எம்ஜிஆர் தான்.

vijayakanth reject famous coca-cola ads : தமிழ்நாடும் தமிழ் மக்களும் என்னுடைய மூச்சு என்று பல அரசியல் பிரபலங்கள் வார்த்தையால் கூறுவார்கள் ஆனால் விஜயகாந்த் அதன்படியே நடந்து கொண்டார் என்ற சம்பவம் பல வருடத்திற்கு முன்பு நிகழ்ந்தது. அதாவது விளம்பர படங்களில் நடிக்க பல நடிகர் நடிகைகள் போட்டி போடுவார்கள் ஆனால் ஒரு கோடி ரூபாய் கொடுத்தாலும் இந்த விளம்பரத்தில் நடிக்க மாட்டேன் என அவர்களை திருப்பி அனுப்பி வைத்த விஜயகாந்த்.

நடிகர் விஜயகாந்த் நாராயணன் விஜயராஜ் அழகர்சாமி என்ற முழு பெயர் கொண்டவர் ஆனால் சினிமாவிற்காக விஜயகாந்த் என்ற பெயரில் அறியப்படுகிறார் இவர் தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர் முக்கிய நடிகர் தயாரிப்பாளர் இயக்குனர் தமிழக அரசியல்வாதி என பன்முகத் திறமை கொண்டவர். 1979 ஆம் ஆண்டு அகல்விளக்கு என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

தனது அப்பாவிடம் சபதம் போட்ட விஜயகாந்த்.. உதவுவதற்கு பின்னால் இப்படி ஒரு கதை உள்ளதா.!

2015 ஆம் ஆண்டு வரை 150 க்கு மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். இப்படி மக்கள் மனதில் தன்னுடைய படங்களின் மூலம் நீங்க இடத்தை பிடித்தார். 1998 ஆம் ஆண்டு கொக்ககோலா நிறுவனம் தன்னுடைய விளம்பர திரைப்படத்தில் நடிப்பதற்காக விஜயகாந்த் அவர்களிடம் ஒரு கோடி ரூபாய் சம்பளமாக பேசினார்கள் அப்பொழுது ஒரு கோடி என்பது இன்றைய காலகட்டத்தில் 30 கோடி ஆகும்.

அந்த சமயத்தில் விஜயகாந்த் அந்த நிறுவனத்தை பார்த்து ஒரு கேள்வி கேட்டார். அதாவது நான் உங்கள் கொக்ககோலா விளம்பரத்தில் நடித்தால் உண்மையாலும் என்னுடைய ரசிகர்கள் வாங்குவார்கள் என் முகத்திற்காக அந்த கொக்கோகோலா வை வாங்கி அருந்துவார்கள் ஆனால் இதனால் பாதிக்கப்பட போவது என்னுடைய தமிழ்நாட்டு மக்கள்தான் ஏனென்றால் தமிழகத்தில் சிறு சிறு குளிர்பான நிறுவனம் உள்ளது நான் உங்க கொக்கோகோலா நிறுவனம் கொடுக்கும் பணத்திற்காக நடித்தாள் தமிழகத்தில் உள்ள சிறிய குளிர்பான நிறுவனம் பாதிக்கப்படும்.

கருப்பு எம்ஜிஆர்-னா சும்மாவா.. சாப்பாடு தராமல் அவமதிக்கப்பட்ட கேப்டன்.! கடைசியில் வயிறார சாப்பாடு போட்டு அழகு பார்த்த மனுஷன்

அதனால் இந்த பணம் எனக்கு முக்கியம் கிடையாது எனக்கு தமிழ்நாடு தமிழ் மக்களும்தான் முக்கியம் என்னால் தமிழக நிறுவனம் பாதிக்கப்படும் என்றால் அந்த விளம்பர படங்களில் நடிக்க மாட்டேன் அப்படி ஒரு பணமே எனக்கு தேவையில்லை எனக் கொக்க கோலா நிறுவனத்திடம் பேசி திருப்பி அனுப்பினார்..