Vijayakanth : சினிமாவிலும், அரசியலிலும் வெற்றியை கண்டு வந்த கேப்டன் விஜயகாந்த் கடந்த 28ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தினார். இவருடைய இறப்பு செய்தியை கேட்டு அரசியல்வாதிகள் சினிமா பிரபலங்கள் மற்றும் தொண்டர்கள் ரசிகர்கள் என அனைவரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
அப்படி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல் ஆகியவர்களை தொடர்ந்து தளபதி விஜய்யும் விஜயகாந்தின் உடலுக்கு சென்று அஞ்சலி செலுத்தினார். அப்பொழுது யாரோ விஜய் மீது செருப்பை வீசினர், அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏன் செருப்பு வீச வேண்டும் என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
2023 – ல் சிறந்த படங்கள்.. ப்ளூ சட்டை மாறன் வெளியிட்ட முழு லிஸ்ட்.. இடம் பிடிக்க தவறிய லியோ, ஜெயிலர்
அதுக்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன அதில் ஒரு காரணத்தை இப்பொழுது பார்ப்போம்.. விஜயகாந்தின் மகன் சகாப்தம் திரைப்படத்தில் நடித்தார் இந்த படம் 2015 ஆம் ஆண்டு வெளிவந்தது இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு விஜயகாந்த் பல சினிமா பிரபலங்களை அழைத்தார் அப்படித் தான் நடிகர் விஜய் வரவேண்டும் என அவரது வீட்டிற்கு தேடி போய் அழைத்துள்ளார்.
ஆனால் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு விஜய் வரவில்லை. கேப்டன் விஜயகாந்த் அழைத்தும் விஜய் வராததால் விஜயகாந்த் ரசிகர்கள் கோபமானார்கள் இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என பிரபல பத்திரிகையாளர் ஒருவர் பேட்டி ஒன்றில் கூறி உள்ளார்.
இதை பார்த்த ரசிகர்கள் விஜயகாந்தின் உடல்நலம் மோசமாக இருந்த போது கூட விஜய் வந்து பார்க்கவில்லை இறந்த பின் பார்க்க வந்தது ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை அது கூட இந்த சம்பவத்திற்கு காரணமாக இருக்கலாம் என கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர்.