ஒரே பாடலுக்கு நடனமாடிய ரஜினிகாந்த் விஜயகாந்த்… எந்த படத்தில் தெரியுமா.?

Captain Vijayakanth: தற்பொழுது தான் முன்னணி நடிகர்கள் பெரிதாக இணைந்து நடிப்பதில் ஆர்வம் காமிப்பது கிடையாது ஆனால் சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் விஜய்- அஜித், விஜயகாந்த்-ரஜினிகாந்த், கமல்- ரஜினிகாந்த் என ஏராளமான பிரபலங்கள் இணைந்து நடித்து கெத்து காண்பித்துள்ளனர். அப்படி ஒரே பாடலில் டான்ஸ் ஆடி கலக்கிய விஜயகாந்த்-ரஜினிகாந்த் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

1987ஆம் ஆண்டு மறைந்த இயக்குனர் கே.பாலசந்திரன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் மனதில் உறுதி வேண்டும். இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. மனதில் உறுதி வேண்டும் திரைப்படத்தில் முன்னணி நடிகை சுஹாசினி நடித்திருப்பார்.

விவாகரத்து செய்தாலும் இனி இரண்டாவது திருமணம் வேண்டாம் என முரட்டு சிங்கிளாக வாழும் 4 நடிகர்கள்.!

இவர் ஒரு செவிலியராக பணியாற்ற தனது குடும்பத்தின் பாரங்களையும் சுமக்கும் நேர்மையான கதாபாத்திரத்தில் சுஹாசினி நடித்திருப்பார். இவருடைய வாழ்க்கையில் ஏற்படும் சுவாரசியமான விஷயங்களை மையமாக வைத்து தான் இப்படமே உருவானது. இவ்வாறு மனதில் உறுதி வேண்டும் திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த ஒரு பாடல் அப்பொழுது பெரிதளவிலும் ஹிட் ஆனது.

captain vijayakanth
captain vijayakanth

அதற்கு முக்கிய காரணம் மூன்று முக்கிய நடிகர்கள் இயக்குனர் பாலச்சந்திரனுக்காக இப்படத்தில் ஒரே பாடலில் கேமியோ கேரக்டரில் நடித்தனர். அதன்படி இப்படத்தில் வரும் ஒரு காட்சியில் நடிகை சுஹாசினி தன்னுடைய கணவர் குறித்து பேசிக் கொண்டிருப்பார் அப்பொழுது அவர் எப்படி இருப்பார் என்பதை விவரிக்கும் வகையில் அந்த பாடல் வரிகள் இடம் பெறும்.

அண்ணாமலைக்காக முத்து மீனா எடுத்த அதிரடி முடிவு.! மூக்கு உடைந்து நிற்கும் விஜயா…

வங்காள கடலே என்று ஆரம்பிக்கும் இந்த பாடலுக்கு இன்றளவும்  ரசிகர்கள் மத்தியில் நல்ல மவுசு உள்ளது. இவ்வாறு இந்த பாடலில் தான் நடிகர் சத்யராஜ், கேப்டன் விஜயகாந்த் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகிய மூன்று பேரும் சுஹாசினி உடன் இணைந்து நடனமாடி இருப்பார்கள்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்