விவாகரத்து செய்தாலும் இனி இரண்டாவது திருமணம் வேண்டாம் என முரட்டு சிங்கிளாக வாழும் 4 நடிகர்கள்.!

Divorced celebrity in Tamil: சினிமாவில் இருக்கும் ஏராளமான பிரபலங்கள் காதலித்து திருமணம் செய்துக் கொண்டு பிறகு விவாகரத்து பெற்று பிரிந்தவர்கள் உள்ளனர். இவ்வாறு விவாகரத்திற்கு பிறகு இரண்டு, மூன்று திருமணம் செய்தவர்களும் உள்ளனர். அதேபோல் பல வருடங்கள் ஆனாலும் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக வாழும் 4 நடிகர்கள் குறித்து பார்க்கலாம்.

ராமராஜன்: நடிகர் ராமராஜன் நடிகை நளினியை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இந்த தம்பதியினர்களுக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கும் நிலையில் தற்பொழுது வரையிலும் இவர்கள் இருவரும் தனித்தனியாக தான் வாழ்ந்து வருகின்றனர். மேலும் பல பேட்டிகளில் நளினி தற்போது வரையிலும் ராமராஜனை  காதலிப்பதாக கூறி வருவதையும் பார்க்க முடிகிறது.

அண்ணாமலைக்காக முத்து மீனா எடுத்த அதிரடி முடிவு.! மூக்கு உடைந்து நிற்கும் விஜயா…

பார்த்திபன்: நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் நடிகை கீதாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு  இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். விவாகரத்திற்கு பிறகு இரண்டாவது திருமணம் செய்துக் கொள்ளாமல் தற்பொழுது வரையிலும் சிங்கிளாக வாழ்ந்து வருகிறார் பார்த்திபன்.

பிரசாந்த்: நடிகர் பிரசாந்த் தனது மனைவி கிரகலட்சுமி அவர்களை 2009ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தார். அதன் பிறகு சினிமாவில் கவனம் செலுத்தி வரும் பிரசாந்த் வேறு திருமணம் செய்து கொள்ளாமல் தற்பொழுது வரையிலும் சிங்கதாகவே உள்ளார்.

3 மணி நேரத்திற்கு மேல் இருந்ததால் சுமாரான படமாக மாறி பல்பு வாங்கிய 5 திரைப்படங்கள்.!

சித்தார்த்: நடிகர் சித்தார்த் தனது மனைவி மேக்னா அவர்களை 2007ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். அதன் பிறகு தற்போது வரையிலும் சிங்கிளாக தான் சித்தார்த் உள்ளார். இவர் பிரபல நடிகை ஒருவருடன் டேட்டிங் செய்வதாகவும் பல தகவல்கள் வெளியானது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்