பிக் பாஸ் வீட்டுக்குள்ள இதுதான் நடக்குது.. கூல் சுரேஷ் ஸ்மார்ட்டா விளையாடுறார்.. எலிமினேஷனுக்கு பிறகு முதன்முறையாக பேட்டி அளித்த விஜய் வர்மா

Bigg Boss season 7 Tamil: பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கடந்த வாரம் எலிமினேஷன் ஆன விஜய் வர்மா பேட்டியளித்துள்ளார். பிக் பாஸ் சீசன் 7 கடந்த 1ம் தேதி முதல் ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்பொழுது மூன்று வாரங்களை கடந்து நான்காவது வாரத்தை எட்டி உள்ளது. இந்நிகழ்ச்சியின் முதல் வாரத்தில் அனன்யா ராவ் வெளியேறியதை தொடர்ந்து பவா செல்லதுரை உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் வெளியேறினார்.

மேலும் கடந்த வாரம் மக்கள் மத்தியில் குறைவான வாக்குகளை பெற்று விஜய் வர்மா வெளியேறி உள்ளார். இந்த வாரம் இரண்டு எலிமினேஷன் இருக்கும் நிலையில் வினுஷா தேவி, யுகேந்திரன் இருவரும் வெளியேறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஐந்து பேர் இன்று வைல்ட் காட்டு என்ட்ரி மூலம் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அறிமுகமாக இருக்கின்றனர்.

விடாமுயற்சி படம் இப்படி தான் இருக்குமா.? அஜித்தின் கெட்டப் இதுதான்..

இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய விஜய் வர்மா பேட்டியில் கூறியதாவது நான் பிக் பாஸ் வீட்டை விட்டு எலிமினேட் ஆவேன் என்று கொஞ்சம் கூட எதிர்பார்க்கல எப்படி வெளியேறினேன் என்பது பற்றி தான் இப்போதும் யோசித்துக் கொண்டே இருக்கிறேன். இப்பொழுது பிக் பாஸ் வீட்டிற்குள்ள ஸ்மார்ட்டா விளையாடுவது என்றால் ஸ்கூல் சுரேஷ் தான். அவர் கிட்ட இருந்து நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும் ஆனால் நான் பார்த்த வரைக்கும் அவர் தான் இந்த விளையாட்டை சூப்பராக விளையாடி கொண்டிருக்கிறார்.

அதுபோல என்னை விட குறைவாக விளையாடுறவுங்க எல்லாம் பிக் பாஸ் வீட்டுக்குள்ள இருக்காங்க ஆனால் அவங்க தான் வெளியே வருவாங்க என எதிர்பார்த்தேன் கடைசியில் இப்படி நடக்கும் என்று நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. ஒரு வேலை வைல்ட் கார்டு என்ட்ரியாக வீட்டிற்குள் போவதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்தால் நான் கண்டிப்பாக உள்ளே போவேன் என்று கூறியுள்ளார்.

செழியனை மிரட்டிய மாலினி..! நடந்த உண்மையை அம்மாவிடம் சொல்லி கட்டிப்பிடித்து அழும் மகன்.! என்ன செய்யப் போகிறாள் பாக்யா.?

மேலும் நீங்கள் வெளியே இருந்து பார்ப்பது பிக் பாஸ் கிடையாது உள்ளே பல நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் வெளியே வேறு விதமாக காட்டப்பட்டு கொண்டிருக்கிறது பல காட்சிகள் கட் செய்து விடுவதால் முழுமையாக ரசிகர்களுக்கு அங்கு என்ன நடக்குது என்பது தெரியாமல் போய்விடுகிறது என தெரிவித்துள்ளார்.