விடாமுயற்சி படம் இப்படி தான் இருக்குமா.? அஜித்தின் கெட்டப் இதுதான்..

Vidaamuyarchi Update: அஜித் குமார் மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் கதை இப்படித்தான் இருக்கும் என புதிய தகவல் வெளியாகி உள்ளது.

கோலிவுட் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித்குமார் துணிவு படத்தின் வெற்றிக்கு பிறகு மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பல பிரச்சினைகளுக்கு பிறகு தற்பொழுது தான் அஜர்பைஜான் நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அஜித்தின் பிறந்தநாள் ஆன மே மாதமே விடாமுயற்சி படத்தின் அதிகாரப்பூர்வமான அப்டேட் வெளியானது ஆனால் தொடர்ந்து சில பிரச்சனைகளால் தள்ளி வைக்கப்பட்டது. இதனை அடுத்து சமீபத்தில் தொடங்கப்பட்டிருக்கும் விடாமுயற்சி படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, ஆக்ஷன் கிங் அர்ஜுன், ஆரவ் உள்ளிட்டவர்கள் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

தற்பொழுது அஜித் மற்றும் ஆரவ் இடையே சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறதாம். பொதுவாக மகிழ் திருமேனி படம் என்றாலே அது ஆக்சன் திரில்லர் படமாக தான் அமையும் மேலும் செம ஸ்டைலாகவும் படம் இயக்குவதை வழக்கமாக வைத்திருக்கிறார். எனவே விடாமுயற்சி திரைப்படம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் இருந்து வருகிறது.

அதன்படி விடாமுயற்சி படம் முழுக்க முழுக்க ஆக்சன் நிறைந்த திரில்லர் படமாக இருக்கும் என்றும் சேம ஸ்டைலாக இருக்கும் என்றும் தகவல் வெளியாகியிருக்கிறது. பில்லா படத்தின் கெட்டப்பில் தான் அஜித் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறாராம்.

அஜர்பைஜானில் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு விரைவில் சென்னையில் படப்பிடிப்பு துவங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இவ்வாறு விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிந்து அடுத்த ஆண்டு விடுமுறை மாதமான மே மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.