படிப்பு to நடிப்பு வாழ்க்கையில் கொஞ்ச நஞ்ச கஷ்டமா..! சிறகடிக்க ஆசை மீனாவின் சோகமான மறுபக்கம்..

Siragadikka aasai serial actress interview: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை கோமதி பிரியா தனது வாழ்க்கையில் கடந்து வந்த பாதைகள் குறித்து கூறியிருக்கும் தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல் தான் சிறகடிக்க ஆசை. டிஆர்பியில் முதலிடத்தைப் பிடித்து வரும் இந்த சீரியல் வெற்றிகரமாக சுவாரசியமான எபிசோடுகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது.

இவ்வாறு சிறகடிக்க ஆசை சீரியலில் அமைதியான பெண்ணாக முத்துவின் மனைவியாக பொறுப்புடன் நடித்து வரும் மீனாவின் உண்மையான பெயர் கோமதி பிரியா இவர் மதுரையில் பிறந்து வளர்ந்த எளிமையான குடும்பத்தை சேர்ந்தவர் அப்பா கூலி வேலை செய்கிறார். கோமதி பிரியாவிற்கு தம்பி மற்றும் ஒரு தங்கை உள்ளனர்.

குடும்ப பாங்காக நடிப்பதற்கு பத்து பொருத்தமும் பக்காவா இருக்கு என ரசிகர்களே வியந்து பார்க்கும் 3 நடிகைகள்.

குடும்பத்தின் மூத்த பெண்ணான இவர் அனைவரையும் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற பொறுப்பு இருந்துள்ளது சிறுவயதில் இருந்தே படித்து வந்த இவர் படிப்பதற்கே பல கஷ்டங்களை அனுபவித்துள்ளார். பல சமயங்களில் அவருடைய ஆசிரியர் தான் இவருக்கு உதவி செய்து படிக்க வைத்துள்ளார். 12ஆம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்ற இவருக்கு BTech படிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.

ஆனால் செலவுக்கு பணம் இல்லாத காரணத்தினால் பிறகு இவருடைய மதிப்பினை பார்த்த அந்த கல்லூரியின் சேர்மன் இவரின் படிப்புக்கு உதவி செய்துள்ளார். படித்துக் கொண்டிருக்கும் பொழுது பார்ட் டைம் வேலையும் செய்து தனது மற்ற செலவுகளை சமாளித்துள்ளார். படித்து முடித்தவுடன் பெங்களூரில் வேலை செய்து வந்த இவருக்கு மாடலிங் துறையிலும் ஆர்வம் இருந்துள்ளது.

எனவே சீரியல்கள் மற்றும் திரைப்படங்களில் நடிக்க கவனம் செலுத்தியுள்ளார். அப்படி நடிப்பதற்கான வாய்ப்புகள் தேட பல இடங்களில் நிராகரித்துள்ளனர் இந்த சமயத்தில் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் ஒரு சிறிய கேரக்டரில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. மேலும் பின்னர் வர்மா படத்திலும் சிறிய கேரக்டரில் கோமதி பிரியா நடித்துள்ளார்.

கவுண்டமணி போல் தலைகீழாக தான் குதிப்பேன் என்பது போல் தலைகீழாக தொங்கும் ஹன்சிகா.! வைரலாகும் புகைப்படம்..

பிறகு கலர்ஸ் தொலைக்காட்சியில் ஓவியா என்ற சீரியலில் ஹீரோயின் ஆக நடிக்க தொடங்கியவர் விஜய் டிவியின் வேலைக்காரன் மற்றும் தற்பொழுது சிறகடிக்க ஆசை சீரியலில் ஹீரோயினாக நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளார். நடிப்பினாலும் அழகினாலும் ரசிகர்களை கவர்ந்த இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு சீரியல்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்