சிறகடிக்க ஆசை சீரியல் ரோகிணியின் உண்மையான காதல் கணவர் இவர்தானா.? ஆனாலும் மனோஜ் லெவலுக்கு வரமாட்டார் போல வைரலாகும் புகைப்படம்

Siragadikka aasai serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகினி கேரக்டரில் நடித்து வரும் நடிகை குறித்த தகவல் வெளியாகி உள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் சமீப காலங்களாக டிஆர்பியில் முன்னேற்றத்தை கண்டுள்ளது.

தொடர்ந்து சன் டிவி சீரியல்கள் தான் டிஆர்பியில் டாப் 5 இடங்களை பிடித்து வருகிறது. எனவே அதற்கு போட்டியாக சிறகடிக்க ஆசை சீரியல் இருக்கும் நிலையில் குடும்ப கதையை மையமாக வைத்து சுவாரசியமான எபிசோடுகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் ரோகினி என்ற கேரக்டரில் நடித்து வருபவரின் பெயர் சல்மா அருண்.

மேகனாவை போட்டுத்தள்ள சுத்து போட்ட கலிவரதன் அர்ஜுன்.. தப்பித்து சரஸ்வதி இடம் கெஞ்சும் மேகனா.! காப்பாற்றுவாரா தமிழ்.?

இவர் முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர் சென்னையில் பிறந்து வளர்ந்த இவர் 1993ஆம் ஆண்டு டிசம்பர் எட்டாம் தேதி பிறந்தார். சென்னையில் படிப்பை முடித்துவிட்டு மாடலிங் பண்ண வேண்டும் என்று முயற்சி செய்து வந்த இவருக்கு விளம்பரங்களில் நடிக்க சில வாய்ப்புகள் கிடைத்தது. எனவே ஆரம்பத்திலேயே பெரிய பெரிய பிராண்ட் கம்பெனி விளம்பரங்களில் நடித்து வந்தார்.

மேலும் அரசாங்க விளம்பரத்திலும் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார் இதன் மூலம் சில திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளை தேட ஆரம்பித்துள்ளார். இந்த சமயத்தில் நம்ம வீட்டுப் பொண்ணு என்ற விஜய் டிவி சீரியலில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது இதன் மூலம் பிரபலமான இவர் பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து வந்தார்.

மேலும் ராஜா ராணி சீரியலிலும் கதாநாயகனுக்கு எதிராக நடைபெறும் சமையல் போட்டியில் பங்கு பெற்றார். இவ்வாறு சின்ன சின்ன கேரக்டரில் நடித்து வந்த இவர் ஜீ தமிழில் அமுதாவும் அன்னலட்சுமி சீரியலில் கதாநாயகி அண்ணியாக வில்லி கேரக்டரில் நடித்திருந்தார்.

Siragadikka aasai serial
Siragadikka aasai serial

அதன் பிறகு தற்போது விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகினி கேரக்டரில் நடித்து வருகிறார். இவ்வாறு சிறகடிக்க ஆசை சீரியல் தான் இவர்கள் மக்கள் மத்தியில் நல்ல பிரபலத்தை தந்துள்ளது. நேற்று தனது மகனுடன் இருக்கும் புகைப்படத்தையும் தன்னுடைய கணவர் குறித்த உருக்கமான பதிவையும் சல்மா பதிவிட்டிருந்தார்.

காதலர் தினத்திற்கு முன்பே பிப்ரவரி- 2 ல் ரிலிஸ் ஆகும் 4 திரைப்படங்கள்.!

அதாவது தனது கணவர் பிறந்த நாளை முன்னிட்டு என் வாழ்வின் ஒரு பகுதியாக அருண் இருப்பதற்கு நன்றி.. இது ஒரு அற்புதமான நாள் பத்து வருடங்கள் காதல் சிரிப்பு மற்றும் மகிழ்ச்சியோடு இணைந்திருக்கிறோம். அதுபோல நான் உன்னை எவ்வளவு நேசிக்கிறேன் என்று உனக்கு தெரியும். நீங்கள் சிறந்த கணவர் என்றும் சிறந்த தந்தை என் வாழ்க்கை நடந்த மிகச் சிறந்த விஷயம் நீங்கள் தான் என்று தன்னுடைய கணவர் மற்றும் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.