மேகனாவை போட்டுத்தள்ள சுத்து போட்ட கலிவரதன் அர்ஜுன்.. தப்பித்து சரஸ்வதி இடம் கெஞ்சும் மேகனா.! காப்பாற்றுவாரா தமிழ்.?

thamizhum saraswathiyum today episode january 30 : தமிழும் சரஸ்வதியும் சீரியலில் இன்றைய எபிசோடில் மேகனாவிடம் அனைத்து உண்மைகளையும் உமாபதி சார் கூறி விட்டார் இதனால் மேகனா எதற்காக மாமா இப்படி பண்ணினார் என யோசித்துக் கொண்டிருக்கிறார் வீட்டிற்கு சென்று வேலைக்கார அம்மாவிடம் கூறியதும் இவங்க எல்லாம் ஏன் இப்படி பண்றாங்க என பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.

அந்த சமயத்தில் கலிவரதன் உள்ளே வருகிறார் இன்னும் ஏதாவது என்னை ஏமாத்த பாக்குறீங்களா என மேகனா கலிவரதனை பார்த்து கேட்க என்ன பாப்பா சொல்ற என கேட்கிறார் தமிழுக்கு கல்யாணம் ஆனது உங்ககிட்ட உமாபதி சார் சொல்லிட்டாராமே அதை ஏன் நீங்க என்கிட்ட இருந்து மறைச்சீங்க அதனால உங்களுக்கு என்ன லாபம் என பேசிக்கொண்டு இருக்கிறார்கள் அதுமட்டுமில்லாமல் கலிவரதன் சட்டையை பிடித்து கேள்வி கேட்டுக் கொண்டிருக்கும் பொழுது களிவரதனின் மகன் மேகனாவை தள்ளி விடுகிறார்.

ஆமா நாங்க தான் எல்லாத்தையும் பிளான் பண்ணுனோம் இப்போ உன்னையும்  போட்டும் தள்ள போறோம் என பேசிக் கொண்டிருக்கிறார். இதனால் மேக்னா அதிர்ச்சி அடைகிறார் அது மட்டும் இல்லாமல் களிவர்தனின் மகன் வேலைக்கார அம்மாவை பிடித்து தள்ளிவிட்டு மேகனா கழுத்தை நெறிக்கிறார் அப்பொழுது கீழே கடந்த கட்டையால் களிவர்தனின் மகனை வேலைக்காரம்மா தாக்குகிறார்.

உடனே கலிவரதன் இவர்களை தாக்க வர கலிவரதனையும் அடித்து விட்டு வீட்டிலிருந்து தப்பித்து விடுகிறார்கள் வீட்டில் இருந்து தப்பி காரில் போய்க் கொண்டிருக்கும் பொழுது சரஸ்வதிக்கு போன் பண்ணி மன்னிப்பு கேட்கிறார் மேகனா, முதலில் சரஸ்வதி ஃபோனை அட்டென்ட் செய்யாமல் இருக்க போனை அட்டென்ட் செய்து நடந்த அனைத்தையும் மேகனாவிடம் கூறி மன்னிப்பும் கேட்கிறார் உடனே எங்கள காப்பாத்துங்க எனக்கெஞ்சுகிறார்.

சரஸ்வதி நீங்க புதிய கம்பெனிக்கு சீக்கிரம் போங்க அங்க நம்ம ஒர்க்கர்ஸ் இருப்பாங்க என பேசிக்கொண்டு இருக்கிறார் உடனே மேகனா அங்கே செல்கிறார் அதற்குள் கலிவரதன் அர்ஜுனனுக்கு போன் செய்து மேகனா இங்கிருந்து தப்பிவிட்டால் உடனே அவளை போட்டுத் தள்ள வேண்டும் கண்டுபிடித்து சீக்கிரம் சொல்லுங்க என பேசுகிறார் அர்ஜுன் தன்னுடைய மாமாவிடம் போன் பண்ணி விஷயத்தை சொல்ல அவரும் ஃபாலோ பண்ணிக் கொண்டிருக்கிறார் அந்த சமயத்தில் மேகனா காரை பார்த்த உடன் அவர் பின்னாடியே துரத்துகிறார்கள்.

இந்த சமயத்தில் சரஸ்வதி வந்த ஆட்டோவை ஆட்டோக்காரர் நிறுத்தி என்னால் உங்க கூட வர முடியாது ஏதோ கொலை என்கிறீர்கள் எனக்கு புள்ள குட்டி இருக்கு நீங்க எப்படியாவது போங்க என கிளம்பி விடுகிறார் சரஸ்வதி நடந்து செல்கிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.