ஆம்புலன்ஸ்சை தொடர்ந்து இலவச ஆட்டோ.. அரசையே திரும்பி பார்க்க வைத்த KPY பாலா…

Vijay Tv Kpy Bala: சின்னத்திரையின் மூலம் அறிமுகமாகி வெள்ளித் திரையில் முன்னணி நடிகர்களாக கலக்கி வரும் ஏராளமான பிரபலங்கள் உள்ளனர் அப்படி விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகி பொதுமக்கள் மத்தியில் பிரபலமாகி இருப்பவர் பாலா.

பொதுமக்களுக்கு அரசியல்வாதிகளே தங்களது சொந்த பணத்தில் எந்த நன்மையும் செய்யாமல் இருந்து வரும் நிலையில் தான் சம்பாதிக்கும் பணத்தை வைத்து பொது மக்களுக்கு உதவி செய்து அரசுக்கே டஃப் கொடுத்து வருகிறார். தான் சம்பாதிக்கும் பணத்தை வைத்து தொடர்ந்து வசதி இல்லாத கிராமத்திற்கு ஆம்புலன்ஸ் வசதியை ஏற்படுத்திக் கொடுத்தார்.

தமிழ் கொடுத்த ஐடியாவால் யாருக்கோ விரித்த வலையில் தானே சிக்கிக் கொள்ளப் போகும் அர்ஜுன்.! நாலா பக்கமும் விசாரிக்கும் போலீஸ்…

மேலும் தூய்மையான குடிநீர் இல்லாமல் கஷ்டப்படும் மக்களுக்கும் தண்ணீர் சுத்தகரிப்பு கருவி அமைத்து கொடுத்தார். சமீபத்தில் கூட மிகவும் வசதி இல்லாத கிராமம் ஒன்றில் கர்ப்பிணி பெண்ணை மலையில் இருந்து தூக்கிச் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் இது குறித்த வீடியோவை பார்த்த பாலா அந்த கிராமத்திற்கும் இதற்கு மேல் இந்த ஊரில் எந்த ஊரு அக்காவுக்கும் இந்த நிலைமை வரக்கூடாது எனக்கூறி ஆம்புலன்ஸ் ஒன்றை வழங்கினார்.

மேலும் தன்னை பற்றி தவறாக கமெண்ட் செய்யும் ரசிகர்களுக்கும் பதிலடி கொடுத்திருந்தார். இதனை அடுத்து சமீபத்தில் மருத்துவமனைக்கு பேருந்துகளில் செல்ல கஷ்டப்படும் நோயாளிகளை பார்த்த பாலா அதற்காக இலவச ஆட்டோ சேவையை துவங்கி உள்ளார். இதில் மருத்துவமனைக்கு செல்ல நினைக்கும் முதியோர்கள், கர்ப்பிணி பெண்கள் போன்றவர்களுக்கு இலவசம் என்பதையும் அந்த ஆட்டோ பின் எழுதியுள்ளார்.

ரோஜா சீரியல் ஹீரோ சிபுவிற்க்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கிறாரா.? வைரலாகும் புகைப்படம்

தற்சமயம் சென்னையில் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் செயல்படும் இந்த ஆட்டோவை தினசரி 24 மணி நேரமும் திட்டமிட்டுள்ளார் பாலா. இவ்வாறு ஓடி ஓடி உதவி செய்யும் பாலாவை பொதுமக்கள் கொண்டாடி வருகின்றனர்.