ரோஜா சீரியல் ஹீரோ சிபுவிற்க்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கிறாரா.? வைரலாகும் புகைப்படம்

Sibbu Suryan Son Photo: ரோஜா சீரியலின் மூலம் ரசிகர்கள் மனதை கவர்ந்த நடிகர் சிம்பு சூரியனின் மகன் புகைப்படம் தற்போது இணையதளத்தில் வெளியாகி உள்ளது. சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான சீரியலுக்கு மக்கள் மத்தியில் பேராதரவு கிடைத்து வருகிறது. அந்த வகையில் தொடர்ந்து டிஆர்பியில் முதல் ஐந்து இடங்களை சன் டிவியின் சீரியல்கள் தான் ஆக்கிரமித்து வருகிறது.

அப்படி ஒரு காலகட்டத்தில் சூப்பர் ஹிட் வெற்றியை பெற்ற சீரியல்தான் ரோஜா. இந்த சீரியல் சில மாதங்களுக்கு முன்பு நிறைவடைந்த நிலையில் இதில் ஹீரோவாக நடித்த சிப்பு சூரியன் பிரபலமானார். மேலும் இவருக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா நல்காரியின் நடித்திருந்தார். இவ்வாறு சிப்பு சூரியன் தமிழ் மட்டுமல்லாமல் கன்னடத்திலும் பல சீரியல்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

குடும்ப பாங்காக நடிப்பதற்கு பத்து பொருத்தமும் பக்காவா இருக்கு என ரசிகர்களே வியந்து பார்க்கும் 3 நடிகைகள்.

சிறுவயதிலிருந்தே நடிப்பதில் ஆர்வம் செலுத்தி வந்த இவர் 2017ஆம் ஆண்டு முதல் கன்னட சீரியல்களில் நடிக்க தொடங்கியுள்ளார். அப்படி சன் டிவியில் 2018ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ரோஜா சீரியலில் அர்ஜுன் என்ற கேரக்டரில் நடித்த வந்தார் இரண்டு வருடங்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்த இந்த சில மாதங்களுக்கு முன்பு நிறைவடைந்தது.

sibbu suryan son photo
sibbu suryan son photo

அதன் பிறகு சிப்பு சூரியன் பாரதி கண்ணம்மா சீரியலில் ஹீரோவாக நடித்தார் இதனை அடுத்து ஜீ தமிழின் புதிய சீரியலில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. தற்பொழுது சிபு சூரியன் தனது குடும்ப புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அதில் தனது மனைவியின் முகத்தை காட்டாமல் என் உலகம், என் இதயம், என்னுடைய எல்லாம்.. என்று குறிப்பிட்டுள்ளார்.

கவுண்டமணி போல் தலைகீழாக தான் குதிப்பேன் என்பது போல் தலைகீழாக தொங்கும் ஹன்சிகா.! வைரலாகும் புகைப்படம்..

மேலும் பேட்டி ஒன்றில் சிப்பு பேசியதாவது சீரியலில் ரொமான்டிக் காட்சிகளில் நடிக்கும் பொழுதெல்லாம் தன் மனைவி பொசசிவ் ஆகிவிடுகிறார் என்றும் தெரிவித்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு சிப்புவுக்கு மகன் பிறந்தார். தற்பொழுது சிப்பு தனது மகனுடன் இருக்கும் புகைப்படத்தை சோசியல் மீடியாவில் வெளியிட இவருக்கு இவ்வளவு பெரிய மகனா என ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.