விரைவில் தொடங்கப் போகும் குக் வித் கோமாளி சீசன் 5 .. அட போட்டியாளர்கள் இவர்களா.?

vijay tv : விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டாலும் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது. இந்த நிலையில் இதுவரை நான்கு சீசன்கள் முடிவடைந்துள்ளது அப்படி இருக்கும் நிலையில் அடுத்ததாக ஐந்தாவது சீசன் தொடங்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

ஐந்தாவது சீசனுக்காக போட்டியாளர்களை தேர்வு செய்யும் பணி தற்போது நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது கடந்த நான்கு சீசன்கள் போலவே இந்த சீசனிலும் சேவ் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் ஆகியவர்கள் நடுவராக இருக்கிறார்கள்.

16 வருடத்திற்கு முன்பே டிஆர்பி- யை ஏற்றுவதற்காக மகா மட்டமான வேலையை செய்ததா விஜய் டிவி.? உண்மையை உடைத்த நடிகர்

அது மட்டுமில்லாமல் இந்த சீசனில் ராக்ஷன் வீஜே மணிமேகலை ஆகியோர்கள் தொகுத்து வழங்க இருக்கிறார்கள். அதே போல் போட்டியாளர்களாக யார் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்ற விவரம் தற்போது தெரியவந்துள்ளது.

இந்த தகவலின் படி நடிகை வடிவுக்கரசி, தம்பி ராமையாவின் மகன் உமாபதி, பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மீனாவாக நடிக்கும் ஹேமா, டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீ தரன் மகள் அக்ஷதா, பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஷ்ணு விஷால் ,ஆகியவர்கள் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

துருவி துருவி கேள்வி கேட்கும் ராஜலட்சுமி கண்ணீரில் மிதக்கும் சூர்யா… அப்ப எல்லாமே பொய்யா என கேள்வி கேட்டுவிட்டு வெளியே சென்ற மகா..

அதுமட்டுமில்லாமல் இன்னும் சில போட்டியாளர்கள் பரிசீலனை செய்யப்பட்டு வருவதாகவும் விரைவில் இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறப்படுகிறது அதைப்போல் கோமாளி வரிசையிலும் இந்த முறை கூடுதலாக சில நபர்களை அறிமுகம் செய்ய இருக்கிறது விஜய் டிவி.