லட்டு மாதிரி இரண்டு கதையை நிராகரித்த விஜய்.. தளபதி 69 படத்தின் இயக்குனர் இவரா.?

Vijay : தமிழ் சினிமாவில் இன்று வசூல் மன்னனாக வருவர் தளபதி விஜய். இவர் நிற்க கூட நேரமில்லாமல் அடுத்தடுத்த படங்களில் நடித்த வருகிறார். வாரிசு, லியோ படங்கள் பெரிய வெற்றியை பதிவு செய்தது தொடர்ந்து முதல் முறையாக வெங்கட் பிரபுவுடன் கூட்டணி அமைத்து “தளபதி 68” படத்தில் விஜய் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.

இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். முதல் கட்ட ஷூட்டிங் போய்க்கொண்டிருக்கிறது  தளபதி 68 படத்தில் விஜய் உடன் இணைந்து யோகி பாபு, மீனாட்சி சௌத்திரி, அரவிந்த், அஜ்மல் அமீர், விடிவி கணேஷ் மற்றும் 90ஸ் நடிகர், நடிகைகளான லைலா, சினேகா, மைக் மோகன், பிரபுதேவா..

ஜெயிச்சிடுவோம் என்ற தெனாவட்டில் ரசிகர்களை எதிர்பார்க்க வைத்து மொக்கை வாங்கிய 5 திரைப்படங்கள்.!

பிரசாந்த் போன்றவர்களும் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது தளபதி 68 படத்தில் மைக் மோகன் தான் விஜய்க்கு வில்லனாக நடிக்கிறார் என சொல்லப்படுகிறது. இந்த படத்தை தொடர்ந்து விஜய்  யாருடன் இணையப் போகிறார் என்ற கேள்வி பரபரப்பாக இருந்து வருகிறது. ஏனென்றால் பல இயக்குனர்களும் முன்வந்து கதை சொல்லி வருகின்றனர்.

இந்த நிலையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் வெளிவந்து பாசிட்டிவ்வான விமர்சனங்களை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால் சந்தோஷம் அடைந்த கார்த்திக் சுப்புராஜ் தொடர்ந்து பேட்டி கொடுத்து வருகிறார் அப்படி பேட்டி ஒன்றில்  அடுத்து புதிதாக ஒரு கதையை ரெடி செய்து வைத்திருக்கிறேன்.

தம்பி உன்ன வளரவிட்டா நாங்க என்ன பண்றது… சிவகார்த்திகேயனை நான்கு திசையிலும் கட்டம் கட்டிய 5 நடிகர்கள்.! ஆறாவதாக இணைந்த பிரபலம்…

அந்த கதையை விஜய்யுடன் சொல்லுவேன் என கூறி இருக்கிறார் இதற்கு முன்பு இறைவி படத்தின் போது, பேட்ட ரிலீஸ் ஆகிய நிலையில் விஜய்க்கு வித்தியாசமான இரண்டு கதைகளை சொன்னேன் ஆனால் அந்த கதைகள் அவரை இம்ப்ரஸ் செய்யவில்லை தற்பொழுது புதிய கதையை தயார் செய்து உள்ளேன். தளபதி 68 படம் முடிந்ததும் அவரை சந்தித்து முழு கதையையும் கூறுவேன் என சொல்லி உள்ளார்.