ஜெயிச்சிடுவோம் என்ற தெனாவட்டில் ரசிகர்களை எதிர்பார்க்க வைத்து மொக்கை வாங்கிய 5 திரைப்படங்கள்.!

தமிழ் சினிமாவில் இன்று உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர்கள் வெற்றி படங்களை கொடுத்த ஓடினாலும் ஒரு சில படங்கள் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டு மொக்கை வாங்கி உள்ளது அப்படிப்பட்ட 5 படங்களை பற்றி இங்கு விதாவாரியாக பார்ப்போம்..

சூர்யா  : ஜெய் பீம், எதற்கு முன் துணிந்தவன் படங்களை தொடர்ந்து கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகிறார். 2014 ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் வெளியான அஞ்சான் திரைப்படம் பெரிய எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில் வெளிவந்து பெரிய மொக்கை வாங்கியது. ஆனால் சூர்யா ரசிகர்களுக்கு இந்த படம் ரொம்பவும் பிடித்திருந்தது ஏனென்றால் இந்த படத்தில் ஆக்சன் அதிகமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சின்ன தாமரையின் கையில் பெரிய தாமரை.. இரண்டாவது போட்டோவை யாரெல்லாம் உத்து பார்த்தீங்க..

விஜய் : தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக ஓடிக்கொண்டிருக்கும் தளபதி விஜய்யின் 50-வது படமான சுறா திரைப்படம் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டது ஆனால் வெளிவந்து கலவையான விமர்சனத்தை பெற்று தோல்வி படமாக மாறியது விஜய் கேரியரில் மிகப்பெரிய மொக்கை படம் என்றால் அது இதுதான்.

விஸ்வரூபம் 2 : கமல் நடிப்பில் வெளியான விஸ்வரூபம் பெரிய ஹிட் அடித்ததை தொடர்ந்து இரண்டாவது பாகத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில் 2018 ஆம் ஆண்டு வெளியானது ஆனால் வெளி வந்ததும் தெரியவில்லை போனதும் தெரியவில்லை அந்த அளவிற்கு படம் இருந்தது.

தம்பி உன்ன வளரவிட்டா நாங்க என்ன பண்றது… சிவகார்த்திகேயனை நான்கு திசையிலும் கட்டம் கட்டிய 5 நடிகர்கள்.! ஆறாவதாக இணைந்த பிரபலம்…

அசல் : ஹாலிவுட் தரத்தில் படம் பண்ண வேண்டும் என்பது அஜித்தின் ஆசை அந்த வகையில் அஜித் நடிப்பில் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் அசல். இந்த படத்தில் அஜித்தின் ஸ்டைல், பாடி லாங்குவேஜ் என அற்புதமாக இருந்தாலும் என்ன காரணமோ என தெரியவில்லை இந்த படம் பெரிய மொக்கை வாங்கியது.

ரஜினி :  படையப்பா, அருணாச்சலம் என பல வெற்றி படங்களை ரஜினி கொடுத்தார் அந்த வரிசையில் பாபா படமும் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டது. ரசிகர்களுக்கு இந்த படம் பிடித்திருந்தால் மக்கள் மத்தியில் சுமாராகத்தான் இடம் பிடித்தது.