விஜயகாந்துடன் நேருக்கு நேர் மோதிய விஜய் திரைப்படங்கள்.. ஜெயிச்சது யார் தெரியுமா.?

மக்கள் மற்றும் ரசிகர்கள் கொண்டாடும் நாயகன் கேப்டன் விஜயகாந்த் இவர் திரை உலகில் பல வெற்றி படங்களை கொடுத்த இவர் பின் அரசியல் பிரவேசம் கண்டு அதிலும் ஜெயித்தார் திடீரென உடம்பு ஒத்துழைக்காததால் ஓய்வு எடுத்து வந்த நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி இயற்கை எய்தினார்.

அவருடைய மறைவுக்குப் பிறகு விஜயகாந்த் பற்றிய பேச்சுக்கள் தொடர்ந்து வெளி வருகின்றன இந்த நிலையில் விஜயகாந்த் உடன் விஜய் மோதிய திரைப்படங்கள் என்னென்ன யார் வெற்றி பெற்றார் என்பது குறித்து இங்கு பார்ப்போம்..

தெரியாம அந்த சூர்யா படத்தில் நடிசிட்டன்… இன்றுவரை வருத்தபடும் முன்னணி நடிகை..!

1996 ஆம் உங்களுக்கு விஜயகாந்த் நடித்த தாயகம் படமும், விஜயின் கோயம்புத்தூர் மாப்பிள்ளை படம் நேருக்கு நேர் மோதியது. இரண்டு படத்திற்குமே நல்ல எதிர்பார்ப்பு இருந்தது தாயகம் படம் அதிரடி ஆக்சன், விஜயின் கோயம்புத்தூர் மாப்பிள்ளை காமெடி கலந்த படமாக இருந்தது. இதில் இரண்டு படங்களுமே வெற்றி பெற்றன.

1997 பொங்கலுக்கு விஜயகாந்தின் தர்ம சக்கரம் படமும், விஜயின் காலமெல்லாம் காத்திருப்பேன் படமும் நேருக்கு நேர் மோதியது.  இரண்டு படமுமே சுமாராக ஓடியது.  2000 ஆண்டு விஜயகாந்த் நடித்த வானத்தைப்போல படமும், விஜயின் கண்ணுக்குள் நிலவும் படமும் வெளியானது இதில் வானத்தைப் போல படம் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய அதிக நாட்கள் ஓடி வசூல் ரீதியாக பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.

மகாவுடன் வாழ முடியாதுன்னு சொன்ன சூர்யாவை லாக் செய்த வேதாச்சலம் – ஆஹா கல்யாணம் ப்ரோமோ

2001 ஆம் ஆண்டு விஜயகாந்தின் வாஞ்சிநாதன் படமும், விஜயின் பிரெண்ட்ஸ் படம் நேருக்கு நேரு கிளாஸ் ஆனது இதில் இரண்டு படங்களுமே சூப்பராக ஓடி வெற்றி பெற்றது.  2003 ஆம் ஆண்டு  விஜயகாந்த் நடித்த சொக்கத்தங்கம் படமும், விஜய் நடித்த வசீகரா படமும் நேருக்கு நேர் மோதியது. ரசிகர்கள் மத்தியில் வசீகரா படம் வெற்றி பெற்றது. விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக சொக்கத்தங்கம் படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.