பிகில் முதல் லியோ வரை.. பாக்ஸ் ஆபீஸில் கல்லா கட்டிய தளபதி படங்கள்.!

vijay movies box office collection: விஜய் நடிப்பில் லியோ திரைப்படம் வெளியாகி திரையரங்குகளில் வெற்றி நடை போட்டு வரும் நிலையில் இதற்கு முன்பு விஜய் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த பாக்ஸ் ஆபீஸ் தகவல் வெளியாகியுள்ளது.

லியோ: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் சுமார் 300 கோடி பட்ஜெட்டில் உருவான லியோ மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியாகி வசூல் வேட்டையை நடத்தி வருகிறது. தற்பொழுது வெளியாகி 10 நாட்களை கடந்திருக்கும் லியோ 500 கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஸ்மால் பாஸ் வீட்டிற்கு தேர்வான வைல்ட் கார்டு போட்டியாளர்கள்.. இரு விட்டாருக்கும் முற்றும் பகை.!

வாரிசு: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு ரூபாய் 300 கோடிக்கு மேல் வசூல் செய்தது. ஆனால் அமெரிக்கா, கேரளா உள்ளிட்ட சில இடங்களில் சொல்லும் அளவிற்கு பெரிதாக வசூல் இல்லை எனவே இந்த படம் வெற்றி படமாக அமையவில்லை.

பீஸ்ட்: பெரிதாக வசூல் செய்யவில்லை என்றாலும் போட்ட பணத்தை எடுக்க முடிந்தது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படம் ரூபாய் 250 கோடி வரை வசூல் செய்ததாக கூறப்படுகிறது.

முக்கிய இடத்தில் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த லியோ.. இத்தனை கோடி வசூலா.?

மாஸ்டர்: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கொரோனாவிற்கு பிறகு ரிலீசான இப்படம் நேரடியாக திரையரங்குகளில் வெளியானது. எனவே கொரோனாவிற்கு பிறகு ரிலீசானதால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வமுடன் திரையரங்குகளுக்கு வந்து மாஸ்டர் திரைப்படத்தினை பார்த்தனர். இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூபாய் 230 கோடி வசூல் செய்து வெற்றி படமாக அமைந்தது.

பிகில்: தெறி, மெர்சல் போன்ற வெற்றி திரைப்படங்களுக்கு பிறகு விஜய் அட்லீ கூட்டணியில் உருவான பிகில் திரைப்படம் கலவை விமர்சனத்தை சந்தித்தது. மேலும் நடிகர் விஜய்யின் கெரியரிலேயே முதன்முறையாக ரூபாய் 300 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. 200 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் சொல்லு அளவிற்கு வெற்றி பெறவில்லை.