ஸ்மால் பாஸ் வீட்டிற்கு தேர்வான வைல்ட் கார்டு போட்டியாளர்கள்.. இரு விட்டாருக்கும் முற்றும் பகை.!

Bigg Boss season 7 today promo: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி பல திருப்புங்களுடன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது வைல்ட் கார்டு போட்டியாளர்களுக்கும், பிக் பாஸ் போட்டியாளர்களுக்கும் இடையே சண்டை ஏற்பட பகை முற்றியுள்ளது.

கடந்த 1ம் தேதி முதல் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7 18 போட்டியாளர்களுடன் மிகவும் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது. இதில் மூன்று போட்டியாளர்கள் வெளியேறி இந்த வாரம் 15 போட்டியாளர்களுடன் ஒளிபரப்பாகி வந்த நிலையில் நான்காவது வார கடைசியில் மக்கள் மத்தியில் குறைவான வாக்குகளை பெற்ற வினுஷா, யுகேந்திரன் ஆகிய இருவரும் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார்கள்.

ஐஸ்கிரீமை எப்படி நீ வீட்டுக்குள்ள கொண்டு வரலாம் சித்ரா தேவியை வெளுத்து வாங்கிய மொத்த குடும்பம் – ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோடு

இதனை அடுத்து ஐந்து பேர் வைல்ட் கார்ட் என்ட்ரியில் பிக் பாஸ் வீட்டிற்கு அறிமுகமாகி இருக்கும் நிலையில் இதனால் பிக் பாஸ் போட்டார்கள் அனைவரும் ஆச்சரியத்திலும், அதிர்ச்சியிலும் இருந்து வருகிறார்கள். இவ்வாறு வைல்ட் கார்டு போட்டியாளர்களை பழிவாங்க வேண்டும் என்பதற்காக பூர்ணிமா அனைவரும் இணைந்து ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார்கள்.

அதாவது வைல்ட் கார்டில் விஜே அர்ச்சனா, சீரியல் நடிகர் தினேஷ், கானா பாடகர் பாலா, பேச்சாளர் அன்னபாரதி, தொகுப்பாளர் ஆர்.ஜே பிராவோ ஆகியோர்கள் என்ட்ரி கொடுத்திருக்கின்றனர். இந்நிலையில் தற்பொழுது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ஸ்மால் பாஸ் வீட்டிற்கு இந்த வார கேப்டன் ஆன பூர்ணிமா போட்டியாளர்களை தேர்ந்தெடுத்து அனுப்பி வைக்கிறார்.

அண்ணாமலைக்கு ஆபரேஷன் பண்ண 4 லட்சம் வேணும்.. டாக்டர் சொன்னதை கேட்டு அதிர்ச்சியான விஜயா, முத்து – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்

அப்படி வைல்ட் கார்டில் என்ட்ரி கொடுத்த தினேஷ், கானா பாலா, அன்னபாரதி, அர்ச்சனா, பிராவோ ஆகியோர்களுடன் சேர்த்து விசித்ராவையும் தேர்ந்தெடுத்து ஸ்மால் பாக்ஸ் வீட்டிற்கு அனுப்ப அப்பனா வைல்ட் கார்ட் போட்டியாளர்களை டார்கெட் பண்றீங்களா என கேட்க ஆமாம் நான் பிளான் பண்ணி தான் பண்றேன் என திமிராக பூர்ணிமா கூற இதனால் பிக் பாஸ் போட்டியாளர்களுக்கும், வைல்ட் கார்டு போட்டியாளர்களுக்கும் இடையே சண்டை முற்றுகிறது.