தேடிவந்த 6 பிளாக்பஸ்டர் படங்களை தவறவிட்ட விஜய்..! இப்போ பீல் பண்ணி என்ன பண்றது

Vijay : தளபதி விஜய் தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு உச்ச நட்சத்திரம். இவர் வருடத்திற்கு ஒரு சிறப்பான படத்தை கொடுத்து வருகிறார் அந்த வகையில் வாரிசு படத்தை தொடர்ந்து லோகேஷ் உடன் கைகோர்த்து நடித்த லியோ படம் வெளியாகி 600 கோடிக்கு மேல் வசூல் அள்ளி மாபெரும் வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து தளபதி 68 படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் தற்பொழுது ஒரு படத்திற்கு 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் விஜய் ஒரு சில நல்ல படங்களை தவற விட்டு உள்ளார் அப்படி விஜய் தவறவிட்ட 6 சூப்பர் ஹிட் படங்களை பற்றி இங்கு விலாவாரியாக பார்ப்போம்..

1. சண்டக்கோழி : லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிப்பில் 2005ஆம் ஆண்டு வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம் சண்டக்கோழி. இந்த படத்தில் விஷால் உடன் இணைந்து மீரா ஜாஸ்மின், ராஜ்கிரன், லால் உள்பட பலர் நடித்திருந்தனர் படம் ஆக்சன், எமோஷனல் என கலந்து கலந்து இருந்தது. முதலில் லிங்குசாமி விஜய், ஜோதிகாவை வைத்து இந்த படத்தை எடுக்க நினைத்தார் விஜய் நிராகரிக்க பின் விஷாலுக்கு சென்றதாம்.

பிக் பாஸ் கொடூரம் வனிதாவின் முகத்தில் தாக்கிய பிரதீப்பின் ரசிகர்.! ரத்தம் சொட்ட சொட்ட வனிதா வெளியிட்ட பதிவு.!

ரன் : 2002 ஆம் ஆண்டு மாதவன் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் வெளியான ரொமான்டிக், ஆக்சன் திரைப்படம் தான் ரன் படம், சிறப்பாக இருந்த காரணத்தினால் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று அதிக நாட்கள் ஓடி, வசூல் ரீதியாக பெரிய வெற்றியை பார்த்தது அந்த ஆண்டில் நல்ல லாபம் பார்த்த படங்களில் இதுவும் ஒன்று..  கதையை எழுதிவிட்டு லிங்குசாமி விஜயை அணுகி இருக்கிறார் சில காரணங்களால் விஜய் தவிர்க்க பின் மாதவனிடம் சென்றது.

3. ஆட்டோகிராப் : சேரன் இயக்கிய இந்த திரைப்படம் 2004 ஆம் ஆண்டு வெளியானது. படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது படத்தில் பல நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர் முதலில் இயக்குனர் சேரன் விஜய்யிடம் தான் இந்த கதையை கூறி இருக்கிறார் அவர் நிராகரிக்கவே வேறு வழி இல்லாமல் சேரன் ஹீரோவாக நடித்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு என்ட்ரி கொடுக்கும் 2 பேர் இவர்கள்தான்.! பிரதீப் வராததால் கடுப்பில் ரசிகர்கள்..

4. சிங்கம் : ஹரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் 2010 ஆண்டு வெளிவந்து வசூல் ரீதியாக பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் சிங்கம் அதனைத் தொடர்ந்து பார்ட் 2, 3 போன்ற படங்களும் வெளியாகி ஹிட் அடித்தது முதலில் இந்தப் படத்தில் ஹீரோவாக நடிக்கவிருந்தது விஜய் தானாம் சில தனிப்பட்ட காரணங்களால் விஜய் படத்தில் நடிக்க மறுக்க பின் சூர்யா அந்த கதாபாத்திரத்தில் கமீட் ஆனாராம்.

5. முதல்வன் : பிரம்மாண்ட பட்ஜெட்டில் படங்களை எடுத்து வரும் ஷங்கர் 1999 ஆம் ஆண்டு அர்ஜுனனை வைத்து முதல்வன் படத்தை எடுத்தார்.  ஏ ஆர் ரகுமான் இசையமைக்க ரகுவரன், மணிவண்ணன், மனிஷா கொய்ராலா, வடிவேலு உள்பட பலர் நடித்திருந்தனர் படம் முழுக்க முழுக்க அரசியல் பற்றி பேசும் படமாக இருந்ததால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வசூல் ரீதியாக படம் ஹிட் அடித்தது. ஷங்கர் முதலில் இந்த கதையை ரஜினி இடம் கூறி இருக்கிறார் அவர் மறுக்கவே பிறகு  கமலஹாசனிடமும் அந்த கதை போய் இருக்கிறது ஆனால் அந்த சமயத்தில்  ஹேராம் படத்தில் பிசியாக இருந்ததால் கடைசியாக அர்ஜுனிடம் சென்று அடைத்ததாம்.

6. அனேகன் : கே வி ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் முழுக்க முழுக்க காதல் மற்றும் திரில்லர் கலந்த படமாக இருந்ததால் நல்ல வரவேற்பை பெற்று ஆரம்பத்தில் இருந்தே வசூல் வேட்டை நடத்தி பெரிய ஹிட் அடித்தது முதலில் விஜய் நடிக்க வைக்க கே வி ஆனந்த்  திட்டமிட்டு இருந்தார் ஆனால் அந்த நேரத்தில் கத்தி, ஜில்லா என விஜய் தொடர்ந்து படங்களில் கமிட்டாகி இருந்ததால் அனேகன் படத்தில் விஜய் நடிக்க முடியாமல் போனதாம்.