பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு என்ட்ரி கொடுக்கும் 2 பேர் இவர்கள்தான்.! பிரதீப் வராததால் கடுப்பில் ரசிகர்கள்..

Bigg Boss 7 Tamil: பிக் பாஸ் சீசன் 7 இன்று இரண்டு போட்டியாளர்கள் என்ட்ரி கொடுக்க இருக்கும் நிலையில் யார் அந்த போட்டியாளர்கள் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. 50 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் இரண்டு பேர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறார்கள்.

அப்படி முதல் போட்டியாளராக சனி கிழமையான நேற்று மக்கள் மத்தியில் குறைவான வாக்குகளை பெற்ற பிராவோ வெளியேறினார். இவரை அடுத்து இன்று அக்ஷயா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வாரம் பூர்ணிமா தான் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் இருந்து வந்த நிலையில் கடைசியில் பிராவோ வெளியேறியது அனைவருக்கும் ஏமாற்றத்தை தந்துள்ளது.

வாரிசு படத்துல நல்லா நடிச்சது ஒரே ஒரு நடிகர் தான்.. அது விஜய் இல்லை – பரபரப்பை ஏற்படுத்திய பிரபலம்

இந்த வாரம் நடைபெற்ற மூன்று பூகம்பம் டாஸ்க்கில் ஒரு டாஸ்க்கில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர். மேலும் இரண்டு டாஸ்க்கில் தோற்று இருப்பதனால் இரண்டு எக்ஸ் போட்டியாளர்கள் என்ட்ரி கொடுக்க உள்ளனர். எனவே இதனால் மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சி சுவாரஸ்யமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் மக்கள் மத்தியில் குறைவான வாக்குகளை பெற்று நிகழ்ச்சியின் ஆரம்பத்திலேயே அடுத்தடுத்து வெளியேறிய அனன்யா ராவ் மற்றும் விஜய் வர்மா இருவரும் தான் என்ட்ரி கொடுக்க உள்ளார்கள். அதாவது இவர்கள் இருவரும் வந்த ஆரம்பத்திலேயே சென்றதால் பெரிதாக இவர்களைப் பற்றி தெரிந்து கொள்ள முடியவில்லை.

“ஏகே” னு கூப்பிட்டாலே நான் சந்தோஷப்படுவேன்.. அதுக்கு பின்னாடி இப்படி ஒரு காரணம் இருக்கா.?

இதன் காரணமாக பிக் பாஸ் இந்த வாய்ப்பை கொடுத்துள்ளது இதனை அடுத்து மறுபுறம் ரசிகர்கள் ரெட் கார்டு கொடுத்து பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட பிரதீப் மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்ட்ரி கொடுத்தால் நன்றாக இருக்கும் என கூறி வருகின்றனர்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்