கலவையான விமர்சனங்களுக்கு மத்தியில் “லியோ” திரைப்படம் இதுவரை அள்ளிய வசூல் எவ்வளவு தெரியுமா.?

Leo : தன்னுடைய நடிப்பு திறமையின் மூலம் கோடான கோடி ரசிகர்களை கவர்ந்து வைத்திருப்பவர் தளபதி விஜய். இவர் வருடத்திற்கு குறைந்தது இரண்டு, மூன்று படங்களை கொடுத்து வருகிறார் அப்படி 2023 ஆம் ஆண்டில் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.

அடுத்தது லோகேஷ் உடன் கூட்டணி அமைத்து லியோ படத்தில் நடித்தார்.  இந்த படத்தை லலித் குமார்  தயாரித்திருந்தார், அனிருத் இசையமைத்திருந்தார்.  படத்தில் விஜய் உடன் இணைந்து மிஷ்கின், அர்ஜுன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி மாஸ்டர், த்ரிஷா, பிக்பாஸ் ஜனனி, ப்ரியா ஆனந்த் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

காதுகுத்து ஃபங்ஷனுக்கு வந்த மீனாவை கூப்பிட பயந்துகிட்டு தம்பியை விட்டு கூப்பிட சொன்ன செந்தில் – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 இன்றைய எபிசோட்

லியோ படம் பல தடைகளை தாண்டி அக்டோபர் 19ஆம் தேதி உலகம் எங்கும் படம் வெளியானது. படத்தில் வரும் ஸ்டண்ட் காட்சிகள் ஒவ்வொன்றும் ஹாலிவுட் தரப்பில் இருந்தது படம் அதிக ஆக்சன், எமோஷனல் என இருந்ததால் மக்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

அதன் காரணமாக ஆரம்பத்தில் இருந்து இப்பொழுது வரையிலுமே வசூலில் எந்த ஒரு குறையும் லியோ திரைப்படம் வைக்கவில்லை.. லியோ திரைப்படம் எதிர்பார்த்த வசூலை அள்ளியதால் கடந்த நவம்பர் 1ஆம் தேதி வெற்றி விழா கோலாகலமாக நடந்து முடிந்தது அடுத்து சக்சஸ் பார்ட்டி வைக்க போயிருப்பதாக தகவல்கள் வெளி வருகின்றன.

42வயதில் தேவசேனாவின் மொத்த சொத்து மதிப்பு இவ்வளவா? பாகுபலியால் உயர்ந்த மார்க்கெட்..

இப்படி இருக்கின்ற நிலையில் லியோ திரைப்படம் இதுவரை உலகம் முழுவதும் எவ்வளவு வசூல் அள்ளி உள்ளது என்பது குறித்து நமக்கு தகவல் கிடைத்திருக்கிறது அதன்படி பார்க்கையில் சுமார் 575 கோடி வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. எப்படியும் லியோ 600 கோடியை தொட்டுவிடும் என பலரும் கூறி  வருகின்றனர். ஆனால் அதிகார பூர்வமாக சொல்லவில்லை..