42வயதில் தேவசேனாவின் மொத்த சொத்து மதிப்பு இவ்வளவா? பாகுபலியால் உயர்ந்த மார்க்கெட்..

Anushka Shetty Net worth: நடிகை அனுஷ்காவின் மொத்த சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. ஒரு காலகட்டத்தில் தொடர்ந்து முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து கலக்கி வந்த நடிகை அனுஷ்காவிற்கு சொல்லும் அளவிற்கு சமீப காலங்களாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அப்படி பட வாய்ப்புகள் அமைந்தாலும் அறிமுக நடிகர்களின் திரைப்படங்கள் தான் நடிக்க வாய்ப்பு கிடைப்பதாக கூறப்படுகிறது.

அனுஷ்கா மாதவன் நடிப்பில் வெளியான இரண்டு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து ரஜினி, விஜய், சூர்யா, விக்ரம் போன்ற முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் ஜோடியாக நடித்து தனக்கான அந்தஸ்தை பிடித்தார்.

கர்ப்பமே இல்லாத ஐஸ்வர்யாவிற்கு சீர்வரிசை செய்ய ஆசைப்படும் கோடீஸ்வரி.. வீட்டில் நடக்கும் பிரச்னையை தெரிந்து கொண்ட மகா – ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோட்

அப்படி அருந்ததி, தேவசேனா போன்ற வேடங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்த அனுஷ்கா திடீரென ஆர்யாவுடன் சேர்ந்து இஞ்சி இடுப்பழகி படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் நடிப்பதற்காக தனது உடல் எடையை கூட்டி குண்டாக மாறினார். அதன் பிறகு உடல் எடை குறைக்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறார் இதன் காரணத்தினால் தான் இவருக்கு பெரிதாக படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.

இவ்வாறு தமிழில் மட்டுமல்லாமல் டோலிவுட், பாலிவுட் என அனைத்திலும் பிசியாக இருந்து வந்த அனுஷ்கா செட்டி தற்பொழுது மிஸ் செட்டி மிஸ்டர் போலீசெட்டி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய நான்கு மொழிகளிலும் வெளியாக உள்ளது.

காதுகுத்து ஃபங்ஷனுக்கு வந்த மீனாவை கூப்பிட பயந்துகிட்டு தம்பியை விட்டு கூப்பிட சொன்ன செந்தில் – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 இன்றைய எபிசோட்

இன்று தனது 42வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நடிகை அனுஷ்கா செட்டி 16 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் இருந்து வரும் இவர் ஒரு படத்தில் நடிப்பதற்காக 4 முதல் 5 கோடி வரை சம்பளமாக வாங்கி வருகிறாராம். பாகுபலி படத்தின் வெற்றிக்கு பிறகு இவருடைய சம்பளம் உயர்ந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது இவருடைய மொத்த சொத்து மதிப்பு 130 கோடி இருக்கும் என்று சொல்லப்படுகிறது இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மையான தெரியவில்லை. நடிகை அனுஷ்கா செட்டி ஹைதராபாத்தில் யோகா ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார் அதன் பிறகு தான் இவருக்கு படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்துள்ளது.