தளபதி சட்டையை பிடித்து மிரட்டும் பிரசாந்த்.! வைரலாகும் GOAT போஸ்டர்.!

தளபதி விஜய் தற்போது ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் GOATஎன்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில்  பல முன்னணி பிரபலங்கள் அவருடன் இணைந்துள்ளனர்.  அதாவது பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல், மைக் மோகன், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி என பலர் இணைந்துள்ளனர்.

மேலும் விஜய் தற்போது அரசியலுக்கு வந்துவிட்டதால்  ஒப்பந்தமாகிய அனைத்து படங்களையும் முடித்துக் கொடுத்துவிட்டு முழுமையாக தன்னை அரசியலில் ஈடுபடுத்திக் கொள்ள உள்ளார். இவர் மக்களுக்கு சேவை செய்வதற்காக 200 கோடி ரூபாய் சம்பளத்தை விட்டு விட்டு அரசியலுக்கு வருவது மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

முதல் மனைவி இறந்ததும் ஒரே வருடத்தில் பாக்யராஜுக்கு இரண்டாவது திருமணம்.. யார் செய்து வைத்தார் தெரியுமா.?

அதனால் இவர் தற்போது நடிக்கும் இந்த கோட் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்புடன் எதிர்பார்க்கப்படுகிறது என  பேசப்படுகிறது. இந்தப் திரைப்படம் டைம் டிராவல் பானியில் எடுக்கப்படுகிறது. இந்த திரைப்படத்தில் விஜய்  டபுள் ஆக்ஷனில் நடிக்கிறார். இதில் அப்பாவுக்கு ஏற்படும் துரோகத்தை மகன் டைம் ட்ராவல் செய்து  முறியடிப்பது தான் கதை.

மேலும் நடு ரோட்டில் ஒரு சீனில்  விஜயும் பிரசாந்தும் தீவிரமாக பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்படி பேசிக் கொண்டிருக்கும்போது விஜயின் கையில் இருக்கும் செல்போனை பிரசாந்த் பிடுங்கி சட்டையை பிடித்து சண்டை போடுகிறார்.

தளபதி விஜயின் கடைசி பட இயக்குனர் இவரா.? வைரலாகும் மாஸ் தகவல்..

இந்த சீனை டாப் ஆங்கிளில் யாரோ புகைப்படம் எடுத்து இணையதளத்தில் கசிய விட்டுள்ளனர். இதனைப் பார்த்த விஜய் சஸ்பென்சாக இல்லாமல் இப்படி சீன் லீக் ஆகிவிட்டது என வெங்கட் பிரபுவிடம் கத்தியுள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.