தளபதி விஜயின் கடைசி பட இயக்குனர் இவரா.? வைரலாகும் மாஸ் தகவல்..

Actor Vijay: தளபதி விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து முறைப்படி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பத்துடன் முழுநேர அரசியலில் ஈடுப்பட போவதால்  படங்களில் நடிக்கப் போவதில்லை என்று அறிவித்தார். தற்பொழுது விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் திரைப்படத்தின் நடித்து வரும் நிலையில் இப்படத்திற்கான படப்பிடிப்புகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்தினை தொடர்ந்து தனது 69வது திரைப்படத்திலும் விஜய் நடிக்க இருக்கும் நிலையில் இதோடு சினிமாவில் இருந்து வெளியேறப் போகிறார். இதனால் சினிமாவிற்கு பெரும் லாஸ் ஏற்பட போவதாக சொல்லப்படுகிறது. இருந்தாலும் விஜய் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் அரசியலுக்கு வருவதனால் மக்கள் அதனை வரவேற்கின்றனர்.

காமெடி நடிகர் பாண்டுவை ஞாபகம் இருக்கிறதா.! அட அவரின் மகனும் ஒரு நடிகரா.?

விஜய்யின் கடைசி படத்தை இயக்கப் போவது லோகேஷ் கனகராஜ், அட்லி இயக்குவார்கள் என கூறப்பட்டு வந்தது. ஆனால் யாராவது ஒரு இயக்குனர் தானே இயக்க வேண்டும் என கேள்வி எழுப்ப வெற்றிமாறன் இயக்க வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.  வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான அசுரன், விடுதலை போன்ற திரைப்படங்கள் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பினை பெற்றது.

தற்பொழுது விடுதலை 2 படத்தினை வெற்றிமாறன் முடித்துள்ளார். இதனை அடுத்து சூர்யாவை வைத்து வாடிவாசல் திரைப்படத்தினை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்பொழுது சூர்யா தொடர்ந்து படங்களில் கமிட்டாகி இருப்பதனால் இந்த படம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

முத்து மீனாவால் விஜயாவிடம் மாட்டிக் கொண்ட ரோகிணி..! உண்மையை சொல்லி விடுவேன் என பணம் கேட்டு மிரட்டும் நபர்..

இந்த சூழலில் விஜய்யின் கடைசி படத்தை வெற்றிமாறன் இயக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. வெற்றிமாறன் விஜய் கூட்டணியில் உருவாக இருக்கும் இப்படத்தை தெலுங்கு ஆர்ஆர்ஆர் படத்தை தயாரித்த DVV என்டர்டைன்மெண்ட் தயாரிக்கலாம் என பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். கடைசி படம் என்பதால் கண்டிப்பாக இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற வேண்டும் என விஜய் எதிர்பார்ப்பதாகவும் சொல்லப்படுகிறது.