காமெடி நடிகர் பாண்டுவை ஞாபகம் இருக்கிறதா.! அட அவரின் மகனும் ஒரு நடிகரா.?

Actor Pandu Son Interview: 90 காலகட்டத்தில் சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் காமெடியனாக நடித்து சினிமாவில் பிரபலமடைந்தவர் தான் நடிகர் பாண்டு. இவருடைய மகன் ஒருவர் தற்பொழுது நடிகராக சில திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் பாண்டு குமுதா என்பவரை திருமணம் செய்துக் கொண்டார் இந்த தம்பதியினர்களுக்கு பிரபு, பிஞ்சு, பிண்டு என மூன்று மகன்கள் உள்ளனர். இந்த மூன்று பேரில் ஒருவர் தான் தற்பொழுது நடிகராக அறிமுகமாகியுள்ளார் தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க காமெடி நடிகராகவும் குணசத்திர வேடங்களிலும் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் தான் நடிகர் பாண்டு.

முத்து மீனாவால் விஜயாவிடம் மாட்டிக் கொண்ட ரோகிணி..! உண்மையை சொல்லி விடுவேன் என பணம் கேட்டு மிரட்டும் நபர்..

தனது பாடி லாங்குவேஜ், எதார்த்தமான நடிப்பு, கண்களை சிமிட்டி தனக்கே உரிய டயலாக் டெலிவரி போன்றவற்றால் பிரபலமானார். பாண்டு கறையெல்லாம் செண்பகப்பூ என்ற படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமாகி பிறகு மெகா ஹிட் படங்கள் மற்றும் தொடர்களிலும் நடித்துள்ளார்.

நடிப்பது மட்டுமல்லாமல் ஓவியத்திலும் அதிக ஆர்வம் கொண்ட பாண்டு தென்னிந்தியாவில் ஓவிய ஆராய்ச்சி படிப்பில் முனைவர் பட்டம் பெற்றவர். அப்படி எம்ஜிஆர் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றியினை பெற்ற உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் முக்கிய படங்களை ஓவியமாக வரைந்து கொடுத்தார்.

சவால் விட்ட சரஸ்வதிக்கு ஜெயிலில் பயத்தை காட்டப் போகும் அர்ஜுன்.! கையால் ஆகாதவராய் நிற்கும் தமிழ்.. பரபரப்பின் உச்சத்தில் தமிழும் சரஸ்வதியும்

இந்த சூழலில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பாண்டு உயிரிழந்தார் பாண்டுவின் மகன் பிண்டு வெள்ளாட்சி என்ற படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமாக இதனைத் தொடர்ந்து சில திரைப்படங்களில் நடித்துள்ளார். அதன்படி சமீபத்தில் பிண்டு பிரபல யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த நிலையில் நடிகர் பாண்டுவை போலவே இவரும் சினிமாவில் வெற்றி பெற வேண்டும் என ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.