Vidaamuyarchi : காதும், காதும் வச்ச மாதிரி வேலையை முடித்த அனிருத்.. வெளிவந்த சூப்பர் அப்டேட்!

Vidaamuyarchi : நடிகர் அஜித்குமார் லைகா தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் வெற்றிகரமாக முடிந்த நிலையில் இரண்டாவது கட்ட ஷூட்டிங் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது படம் அதிரடி ஆக்சன் படமாக இருக்கும் என தெரிய வருகிறது.

அதை உறுதிப்படுத்தும் வகையில் படத்தில் அஜித்துக்கு நிகராக அர்ஜுன், சஞ்சய் தத், ஆரவ் போன்றவர்கள் நடிக்கிறார்கள் மேலும் த்ரிஷா, ரெஜினா போன்ற முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர். நடிகர் அஜித்குமார் ஆரம்பத்தில் தயாரிப்பாளர்களையும் இயக்குனர்களையும் நம்பி கதையை கேட்காமல் நடித்தார்.

என்ன ஹன்சிகா மேடம், புருஷன் சோறு போடலையா அநியாயத்துக்கு ஒல்லியா ஆகிட்டீங்க..! வைரலாகும் புகைப்படம்..

மேலும் அந்தப் படத்தின் பாடல்கள் எப்படி இருக்கிறது என எதுவுமே அவர் கண்டுகொள்ள மாட்டார் ஆனால் தற்பொழுது ஒவ்வொரு படத்தையும் பார்த்து பார்த்து நடித்து வருகிறார் தன்னுடைய படங்களில் சமூக அக்கறை உள்ள கருத்துக்கள் இடம் பெற வேண்டும் பாடல்கள் ரசிகர்களை சந்தோஷப்படுத்த வேண்டும் என முடிவு செய்துள்ளாராம்.

அந்த வகையில் விடாமுயற்சி படம் அதிரடி ஆக்சன் படமாக இருந்தாலும் மக்களுக்கு தேவையான சமூக அக்கறை உள்ள கருத்துக்கள் இடம்பெரும் என தெரிவிக்கப்படுகிறது. அதுபோல படத்தில் பாடல்களும் தரமாக இருக்க வேண்டுமென அனிருத்தை உள்ளே தூக்கி போட்டு உள்ளனர். ஏற்கனவே அஜித்திற்கு இவர் போட்ட மியூசிக் மற்றும் பாடல்கள் வரவேற்பு பெற்ற நிலையில் விடாமுயற்சி படத்திலும் அதை எதிர் பார்க்கின்றனர் ரசிகர்கள்..

ஒரு நாளைக்கு ஐந்திலிருந்து பத்து பேர் பணத்தைக் கொட்டுவாங்க.. அந்தப் பார்ட்டிக்கு நானும் போய் இருக்கேன்… உண்மையை உடைத்த இலக்கியா

அந்த வகையில் விடாமுயற்சி படத்தில் மொத்தம் நான்கு அல்லது ஐந்து பாடல்கள் இருக்கும் என கூறப்படுகிறது. அனிருத் தளபதி 68 படத்திற்கு லோக்கலாக ஒரு பாடல் போட்டு இருக்கிறாராம் அதைவிட தர லோக்கலாக அஜித்தின் விடாமுயற்சிக்கு ஒரு பாடலையும் அனிருத் ரெடி செய்து உள்ளாராம் இதனால் விடாமுயற்சி படத்தை ரசிகர்கள் அதிக அளவில் எதிர்பார்த்து இருக்கின்றனர்.