மீண்டும் இரண்டாவது முறையாக வெற்றிமாறன் படத்தை தவறவிட்ட சிம்பு..! உண்மையை உடைத்த சுரேஷ் காமாட்சி…

Dhanush – Vetrimaaran: இயக்குனர் வெற்றிமாறன் தொடர்ந்து வெற்றி திரைப்படங்களை தந்து வரும் நிலையில் இவர் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தார். வெற்றிமாறன் இதுவரையிலும் ஆறு திரைப்படங்களை இயக்கி உள்ளார் இந்த ஆறு திரைப்படங்களுமே பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.

மேலும் இரண்டு திரைப்படங்கள் தேசிய விருதுக்களையும் பெற்ற சூழலில் தற்பொழுது விடுதலை 2 வெளியாக இருக்கிறது. பிறகு சூர்யாவை வைத்து வாடிவாசல் படத்தினை உருவாக்க உள்ளார். தனுஷை வைத்து வெற்றிமாறன் இயக்கிய அசுரன் திரைப்படம் தேசிய விருதை பெற்றது இதனை அடுத்து விஜய் சேதுபதி, சூர்யாவை வைத்து விடுதலை திரைப்படத்தை இயக்கினார்.

ஹாஸ்பிடலுக்கு சென்ற முத்துவை அசிங்கப்படுத்திய சத்தியா.. மீனாவிடம் டாக்டர் சொன்ன உண்மை.! பரபரப்பின் உச்சத்தில் சிறகடிக்க ஆசை

இப்படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்த நிலையில் விரைவில் விடுதலை 2 படப்பிடிப்பு முடிந்ததும் திரையரங்களில் வெளியாக இருக்கிறது. இந்த சூழலில் வெற்றிமாறன் சிம்பு கூட்டணி இரண்டாவது முறையும் மிஸ் ஆனதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசியுள்ளார். அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், சிம்புவும் வெங்கட் பிரபுவும் இணைந்த மாநாடு திரைப்படம் மெகா ஹிட் ஆனது.

அந்த சமயத்தில் முதலில் சிம்புவின் தேதி கிடைத்த பொழுது அவரையும் வெற்றிமாறானையும் வைத்து ஒரு படத்தை எடுக்கத்தான் இருந்தது. அதற்காக வெற்றிமாறன் சிம்புவிடம் கதை சொல்லி ஓகேவும் வாங்கிவிட்டார் ஏதோ சில காரணங்களால் அந்த படம் ஆரம்பிக்கவில்லை என்று தெரிவித்தார்.

பாண்டியனை பார்க்க போன சரவணனுக்கு பெரும் அதிர்ச்சி.! அவசரப்பட்டுட்டியே சரவணா..

2007ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான பொல்லாதவன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான வெற்றிமாறன் இதனை அடுத்து ஆடுகளம் என்ற சூப்பர் ஹிட் படத்தினை கொடுத்தார். மேலும் விசாரணை வட சென்னை போன்ற தொடர்ந்து வெற்றி திரைப்படங்களை கொடுத்து வருகிறார்.