வெங்கட் பிரபு சார் இன்னைக்கு “விஜயதசமி” அந்த ஸ்கிரிப்ட் அனுப்பிச்சா பூஜையை போடலாம்.. மரணமாய் கலாய்க்கும் தளபதி 68 டீம்

Thalapathy 68 : தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் வெற்றி கண்டு வருபவர் வெங்கட் பிரபு முதலில் சென்னை 600028 என்னும் படத்தை எடுத்து வெற்றி கண்டார் அடுத்த கோவா, மங்காத்தா, மாசு என்கிற மாசிலாமணி, சென்னை 600028 2, மாநாடு போன்ற படங்கள் வெற்றி பெற்றன.

கடைசியாக மன்மத லீலை மற்றும் கஸ்டடி போன்ற படங்களை எடுத்தார். ஆனால் அந்த படங்கள் அனைத்துமே சுமாராக ஓடியதால் தற்பொழுது வெற்றியை கொடுக்க விஜய் உடன் கூட்டணி அமைத்து தளபதி 68 படத்தை எடுக்க இருக்கிறார். இந்த படத்தை மிகப் பிரமாண்ட பொருட்ச அளவில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.

தளபதி 68 -ல் நடிக்கும் முன்னணி நடிகர், நடிகைகள் வெளிவந்த அதிகாரபூர்வ அறிவிப்பு.! 21 வருடத்திற்கு பிறகு விஜயுடன் இணையும் நடிகை

அண்மையில் படத்தின் கதைக்கு தேவைக்காக விஜய்,  வெங்கட் பிரபு போன்றவர்கள் அமெரிக்கா சென்று ஒரு புதிய தொழில்நுட்பத்தை பார்த்து வந்தனர் அதன் பிறகு பூஜையை போட்டு படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக போய்க்கொண்டு இருக்கிறது. படத்தில் விஜய் உடன்  பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், சினேகா, மீனாட்சி சௌத்திரி, லைலா, யோகி பாபு, பிரேம்ஜி கங்கை அமரன்..

அரவிந்தன் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர் யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார். இந்த நிலையில் இன்று விஜயதசமியை முன்னிட்டு தளபதி 68 படத்தை தயாரிக்கும் ஏஜிஎஸ் நிறுவனம் தனது பக்கத்தில் வெங்கட் பிரபுவை கலாய்த்து பதிவை போட்டு உள்ளது.

Actor vijay
Actor vijay

2023 tamil best collection movie : வெறும் 9 படங்களின் மூலம் 2000 கோடி வசூல்.! தாறுமாறாக எகிறும் 2023 தமிழ் சினிமா நிலவரம்..

அதில் சொல்லி உள்ளது என்னவென்றால்.. வெங்கட் பிரபு சார் இன்னைக்கு விஜயதசமி அந்த ஸ்கிரிப்ட் கொஞ்சம் அனுப்பிச்சா அதையும் பூஜை போடலாம்  என சொல்ல அதற்கு உடனே வெங்கட் பிரபு செந்தில் வெட்கப்படுவதை போட்டு உள்ளார் இதை பார்த்த ரசிகர்கள் கமெண்ட் அடித்து சிரித்து வருகின்றனர்.