பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2..! புதிதாக களம் இறங்கும் பிரபலங்கள் யார் யார் தெரியுமா.?

pandian stores 2 : கூட்டுக் குடும்பங்கள் கதையை நேரில் பார்க்க முடியவில்லை என்றாலும் சீரியலில் காண முடிகிறது அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த சீரியலான பாண்டியன் ஸ்டோர் சீரியலில் கூட்டு குடும்பம் கதையாக ஒளிபரப்பப்பட்டு வந்தது. இந்த சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாலும் இருந்து வருகிறார்கள்.

பாண்டியன் ஸ்டோர் சீரியல் முடிவடையை இருக்கிறது இந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர் இரண்டாவது சீசனை வருகின்ற அக்டோபர் 30-ஆம் தேதி ஒளிபரப்ப இருக்கிறார்கள் முதல் சீசனில் நடித்த முத்துவை தவிர இந்த சீசனில் யாரும் நடிக்கவில்லை அதேபோல் முத்துவுக்கு ஜோடியாக நிரோஷா களமிறங்கியுள்ளார் .

2023 : இரண்டாவது நாளில் பெத்த வசூல் செய்த 5 திரைப்படங்கள்.. சூப்பர் ஸ்டாரிடம் அடிபணிந்த விஜய்

அவர்களுடன் இணைந்து விஜே கதிர், வசந்த் வசீ ஆகாஷ் , பிரேம்குமார் சத்யசாய் கிருஷ்ணன் ஆகியோர்கள் பாண்டியன் ஸ்டோர் இரண்டாவது சீசனில் களமிறங்குகிறார்கள் இவர்களுடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் இரண்டாவது சீசனில் யார் யார் நடிக்கப் போகிறார்கள் என்ற தகவல் தற்பொழுது கசிந்துள்ளது.

அந்த வகையில் வெள்ளித்திரை மற்றும் சின்ன திரையில் நடித்து வந்த அஜய் ரத்தினம் பாண்டியன் ஸ்டோர்ஸ் இரண்டாவது சீசனில் நடிக்க இருக்கிறார் அதுமட்டுமில்லாமல் பிரபல நிகழ்ச்சியில் பங்கு பெற்ற ஷாலினி, ஹாசினி ஆகியோர்களும் நடிக்க இருக்கிறார்கள்.

கமல் படத்தில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா.! இயக்குனர் யார் தெரியுமா.? லிப் லாக் இருக்குமா..

புத்தம் புது கதைகளத்துடன் களமிறங்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் இரண்டாவது சீசன் பார்ப்பதற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள் இந்த நிலையில் வருகின்ற அக்டோபர் 30ஆம் தேதி முதல் இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் இரண்டாவது சீசன் ஒளிபரப்பப்பட போகிறது.

Ajay Rathnam
Ajay Rathnam