2023 : இரண்டாவது நாளில் பெத்த வசூல் செய்த 5 திரைப்படங்கள்.. சூப்பர் ஸ்டாரிடம் அடிபணிந்த விஜய்

சினிமா உலகில் டாப் ஹீரோவின் படம் வெளிவந்தால் முதல் நாளில் எவ்வளவு வசூல் செய்து என்பது பற்றி தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டுகின்றனர் ஆனால் அடுத்தடுத்த நாட்களில் அதை பற்றி  தெரிந்து கொள்ள ஆதிக ஆர்வம் காட்டுவதில்லை இந்த நிலையில் இரண்டாவது நாளில் அதிகம் வசூல் செய்த 4 திரைப்படங்கள் பற்றி பார்ப்போம்..

பதான் : பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் முழுக்க முழுக்க ஆக்சன் மற்றும் ரொமான்டிக் கலந்த படமாக இருந்ததால் அதிக நாட்கள் ஓடிய 1000 கோடிக்கு மேல் வசூல் செய்தது இந்த படம் இரண்டாவது நாளில் மட்டும் சுமார் 113.60 கோடி வசூல் செய்தது.

ஜவான் : அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவான இந்த திரைப்படம் முழுக்க முழுக்க அப்பா – மகன் பாசத்தை மையமாக வைத்து உருவானது படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, பிரியாமணி, யோகி பாபு, தீபிகா படுகோன் மற்றும் பலர் நடித்திருந்தனர். 1000 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இந்த படம் இரண்டாவது நாளில் மட்டும் 109.24 கோடி வசூல் செய்தது.

ஆதிபுருஷ் : பிரபாஸ் நடிக்கும் படங்கள் ஒவ்வொன்றும் பெரிய அளவில் எதிர்பார்க்கப்படுகிறது அப்படி ஆதிபுருஷ் படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் படம் வெளிவந்து நல்ல விமர்சனத்தை பெற்று வசூல் ரீதியாக வெற்றி கண்டது இரண்டாவது நாளில் மட்டும் 81.21 கோடி வசூல் செய்தது

ஜெயிலர் : தொடர்ந்து சுமாரான படங்களை கொடுத்து வந்த ரஜினிகாந்த் நெல்சன் உடன் கைகோர்த்து ஜெயிலர் படத்தில் நடித்தார் வழக்கமான கதையாக இருந்தாலும் ரஜினியின் மாறுபட்ட நடிப்பு சிவராஜ் குமார், மோகன்லால் ஆகிய அவர்களின் என்ட்ரி போன்றவை படத்தை தூக்கி நிப்பாட்டியது உலகம் முழுவதும் 600 கோடிக்கு மேல் வசூல் அள்ளியது. இரண்டாவது நாளில் மட்டும் 56.24 கோடி வசூல் செய்தது.

லியோ : லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான இந்த திரைப்படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்த நிலையில் செப்டம்பர் 19 ஆம் தேதி வெளியானது. விஜய் படத்தில் பார்த்திபன் கதாபாத்திரத்தில் பின்னி பெடலெடுத்தார் படம் ஆக்சனுக்கு பஞ்சமே இல்லாமல் இருந்ததால் ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர். இதுவரை மட்டுமே 400 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது இரண்டாவது நாளில் மட்டும் 47.35 கோடி வசூல் செய்துள்ளது.