ஜோவிகாவுக்கு படிப்பு வரல.. ஆனா இதுல கில்லாடி.! உண்மையை உடைக்கும் வனிதா

Vanitha vijayakumar: தனது மகள் ஜோதிகா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன்பே ஹீரோயின் ஆகிவிட்டதாக நடிகை வனிதா விஜயகுமார் பேட்டி அளித்துள்ளார். பிக்பாஸ் சீசன் 7 விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் 18 போட்டியாளர்களுடன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்நிகழ்ச்சி தொடங்கப்பட்ட சில தினங்களாக ஜோவிகா மிகவும் அமைதியாக இருந்து வந்தார்.

எனவே வனிதா விஜயகுமாரிடம் உங்களுடைய மகள் ஏன் இவ்வளவு அமைதியாக இருப்பதாக கேட்டு வந்தனர். அதற்கு பதில் அளித்த வனிதா அது ஒரு வித்தியாசமான கேரக்டர் பொருத்துப் பாருங்கள் உங்களுக்கே பிடிக்கும் என கூறினார். அப்ப இந்த சூழலில் நேற்று சோசியல் மீடியாவில் ஹாட் டாப்பிக்காக ஜோவிகா பற்றி தான் பேசப்பட்டு வருகிறது.

நான் தற்பொழுது அடைந்திருக்கும் நிலைக்கு முக்கிய காரணம் ‘தளபதி’ விஜய் தான்! இயக்குனர் அட்லீ..

அதாவது விசித்ரா அடிப்படை கல்வி அவசியம் என சொல்ல இதற்கு எதிராக பேசிய ஜோவிகா தனக்கு படிப்பு வராததால் தான் படிப்பை நிறுத்தினேன் ஒரு விஷயம் பிடிச்சா செய் பிடிக்கலைனா செய்யாத அப்படி தான் நானும் எனக்கு பிடித்ததை செய்து வருகிறேன் என சண்டை போட்டார். எனவே இதற்கு முழுவதுமாக ஆதரவு தெரிவித்த வனிதா ஜோவிகா பற்றி பல சுவாரசியமான தகவல்களையும் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

jovika
jovika

அதாவது கமலஹாசன் முதல் எபிசோடில் ஜோதிகாவை டெக்னீசியன் என கூறியதை சுட்டிக்காட்டிய வனிதா அவர் இயக்குனர் பார்த்திபனிடம் கடந்த சில மாதங்களாக உதவி இயக்குனராக பணியாற்றியதாக கூறினார். மேலும் தன்னிடம் இரண்டு கார்கள் இருந்தாலும் ஜோவிகாவை மெட்ரோ ரயிலில் தான் பார்த்திபனின் அலுவலகத்திற்கு அனுப்புவேன் என்றும் அப்படி போனால் தான் அவளுக்கு உதவி இயக்குனர்களின் கஷ்டம் என்ன என்று புரியும் எனவும் கூறினார்.

விஜய் பார்க்கத்தான் அமைதி.! பயங்கரமா யோசிப்பாரு.. லியோ சூட்டிங் ஸ்பாட்டில் நடந்ததை புட்டு புட்டு வைத்த வில்லன் நடிகர்

நானும் பி. வாசுவிடம் 10 படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியதாகவும் வனிதா அந்த பேட்டியில் தெரிவித்தார். இதையெல்லாம் விட ஜோவிகா பிக்பாஸ் செல்வதற்கு முன்னரே இரண்டு படங்களில் ஹீரோயினாக நடிக்க கமிட் ஆகிவிட்டாராம். ஒன்னு தமிழ் படம் என்றும் மற்றொன்று தெலுங்கு எனவும் ஹீரோயினாக கமிட்டான பிறகுதான் ஜோவிகாவிற்கு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்ல வாய்ப்பு கிடைத்ததாக மிகவும் பெருமையாக பேசிவுள்ளார் வனிதா.