விஜய் பார்க்கத்தான் அமைதி.! பயங்கரமா யோசிப்பாரு.. லியோ சூட்டிங் ஸ்பாட்டில் நடந்ததை புட்டு புட்டு வைத்த வில்லன் நடிகர்

Leo Movie : ஜெயிலர், ஜவான், மார்க் ஆண்டனி ஆகிய படங்களைத் தொடர்ந்து ரசிகர்கள் பெரிய அளவில் எதிர்நோக்கி காத்திருக்கும் திரைப்படம் லியோ. வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக இருக்கிறது அதற்கு முன்பாக டிரைலர் வெளிவந்து பட்டையை கிளப்பியதால் படத்திற்கான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது.

ட்ரைலரை பார்த்த பலரும் நிச்சயம் ஜெயிலர் படத்தின் வசூலை பீட் பண்ணும் 1000 கோடிக்கு மேல் வசூல் செய்வது உறுதியென அடித்து கூறி வருகின்றனர் இந்த நிலையில் லியோ படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஒரு நடிகர் விஜய் பற்றி பேசி உள்ளார் அவர் சொன்னது என்னவென்றால்..

லோகேஷ் இப்படி செஞ்சது பெருமையா இருக்கு.. தனக்கும் ரஜினிக்கும் இருக்கும் நட்பு குறித்து குட்டி ஸ்டோரி கூறிய கமல்.!

மேக்கிங் வீடியோ வெளியிட்டால்  அதில் பல கியூட்டான சில விஷயங்கள் தெரியும்  எனக் கூறினார் அடுத்து பேசிய அந்த நடிகர் நடிகர் விஜய் ரொம்ப சிம்ப்ளிசிட்டி அடக்கமானவர் என கூறினார். ஒரு தடவை என்னுடைய உடம்பு ரொம்ப சூடாக இருந்தது இதை பார்த்த விஜய் கிட்டக்க வந்து என்னை கட்டிப்பிடி நண்பா என்றார். அங்கு குளிர் அதிகம்.

நானும் கட்டிப்பிடித்தேன் ஒரே பெரிய நடிகர் என்பதை அவர் அங்கு பார்க்கவில்லை என கூறினார் மேலும்  விஜய் ஆக்ஷன் காட்சிகளை கவனிப்பார்.  விஷாலின் கதகளி படத்தில் நான் நடித்தேன் அப்பொழுது சண்டைக் காட்சிகள் ஒரிஜினலாக இருக்க வேண்டும் என்று நினைப்பார் ஆனால் விஜய் அப்படி கிடையாது சண்டையில் எந்த மாதிரியான பொருளை பயன்படுத்துகிறோம்..

ஹீரோயின், உதவி இயக்குனர் என கலக்கும் ஜோவிகா.! பல உண்மைகளை உடைத்த வனிதா..

அது அடித்தால் அவர்களுக்கு வலிக்குமா வலிக்காதா என்றெல்லாம் செக் பண்ணி பார்ப்பார் சற்று வலித்தால் கூட மாஸ்டரை கூப்பிட்டு இதை மாற்றுங்கள் அடித்தால் வலிக்காதது போல மென்மையாக இருக்க வேண்டும் என கூறுவாராம் அப்படி ஒவ்வொரு ஆர்டிஸ்ட் மீதும் ரொம்ப மரியாதை எல்லாம் வைத்திருப்பவர் தான் விஜய் எனக் கூறியுள்ளார்.