லோகேஷ் இப்படி செஞ்சது பெருமையா இருக்கு.. தனக்கும் ரஜினிக்கும் இருக்கும் நட்பு குறித்து குட்டி ஸ்டோரி கூறிய கமல்.!

Lokesh kanagaraj: தமிழ் சினிமாவில் கமலஹாசன் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் மாபெரும் வெற்றியினை பெற்று வருகிறது. அப்படி இரண்டாவது இன்னிங்ஸில் கமலுக்கு தரமான வெற்றியை கொடுத்த பெருமை லோகேஷ்க்கே தான் சேரும். ஏனென்றால் விக்ரம் படத்தின் வெற்றி அந்த அளவிற்கு உள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்குனராக சில திரைப்படங்கள் மட்டுமே இயக்கி இருந்தாலும் அந்த படங்கள் அனைத்தும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து வருகிறது. எதிர்பாராத கதைகளத்தோடு இவருடைய இயக்கத்தில் வெளியாகும் அனைத்து படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது.

குட்டி இடுப்பை காட்டி தூங்கவிடாமல் செய்த அனிகா சுரேந்தர்.! லைக்குகளை அள்ளும் புகைப்படம்

அப்படி தாறுமாறான வெற்றியைப் பெற்ற திரைப்படம் தான் விக்ரம். தமிழ் படங்களும் பல கோடி வசூல் செய்யும் என்பதை நிரூபித்து காண்பித்து ஒட்டுமொத்த தமிழ் நடிகர்களுக்கும் நம்பிக்கையையும், ஊக்கத்தையும் கொடுத்துள்ளது. அப்படி கமலை வைத்து விக்ரம் படத்தை செதுக்கியிருந்தார்.

இவ்வாறு விக்ரம் படத்தினை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் விஜய்யை வைத்து லியோ படத்தினை உருவாகி இருக்கும் நிலையில் இந்த படம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி அன்று வெளியாக இருக்கிறது. இதற்காக ரசிகர்கள் மிகுந்த ஆர்வமுடன் காத்து வருகின்றனர்.

விஜய் பார்க்கத்தான் அமைதி.! பயங்கரமா யோசிப்பாரு.. லியோ சூட்டிங் ஸ்பாட்டில் நடந்ததை புட்டு புட்டு வைத்த வில்லன் நடிகர்

kamal haasan 1
kamal haasan 1

இதனை அடுத்து லோகேஷ் கனகராஜ் குறித்து பேசிய கமலஹாசன் கூறியதாவது, என்னோட ரசிகன் ஒருவன் என் நண்பனாக ஒரு படம் பண்ணுவது என்பது எனக்கு தான் பெருமை என்று லோகேஷ் பற்றியும் தனக்கும் ரஜினிக்கும் உடனான நட்பு குறித்தும் கூறியுள்ளார். லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக ரஜினியை வைத்து படம் இயக்க இருக்கும் நிலையில் இது குறித்து கமலஹாசன் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பேசிய கமலஹாசன் கிரிக்கெட் ஆடுகளத்தில் விளையாடுவது என்பது வேறு, அதில் போட்டி இருக்கும். அதற்காக ஓடிவந்து பால் போடும்போது கால இடையில் விட்டு தட்டி ஜெயிக்க வேண்டும் என்ற ஒரு நேரமும் நினைத்ததில்லை. நினைக்கவும் மாட்டோம் என்று தனக்கும் ரஜினிக்கும் உள்ள நட்பினை வெளிப்படுத்தி உள்ளார்.