போலீஸ் அதிகாரியாக மிரட்டும் வனிதா.. “வைஜெயந்தி ஐபிஎஸ்” போஸ்டரை பார்த்து கமெண்ட் அடிக்கும் ரசிகர்கள்

Vanitha Vijayakumar : 80 -களிலிருந்து இப்பொழுது வரையிலும் பல்வேறு படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்து பேரையும் புகழையும் சம்பாதித்து உள்ளவர் விஜயகுமார். அவரை தொடர்ந்து அவருடைய மகள்கள் மற்றும் மகன் சினிமா உலகில் கால் தடம் பதித்து வெற்றி கண்டு வருகின்றனர். விஜயகுமாரின் மகள் வனிதா விஜய் நடிப்பில் உருவான சந்திரலேகா படத்தில் ஹீரோயின்னாக நடித்து அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து  அடுத்தடுத்த படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார் 2007 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர் அதன் பின்னர் இவர் ஜெயராமன், ராபர்ட் மாஸ்டர், பீட்டர் பால் என திருமணம் செய்து விவாகரத்து பெற்ற பிரிந்தார். இப்போ தனிமையில் வாழ்ந்து வருகிறார்.

லோகேஷ் படத்திலிருந்து விலகிய நயன்தாரா.! குழப்பத்தில் ராகவா லாரன்ஸ் படக்குழு..

இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார் உள்ளே சென்ற வனிதா  திமிரு, தெனாவட்டுமாக பேசி  ரசிகர்கள் மத்தியில் வெறுப்பை சம்பாதித்தார் சில நாட்களிலேயே வெளியேறினார். வனிதாவை தொடர்ந்து அவரது மகள் ஜோவிகா பிக்பாஸ் 7- ல் விளையாடி வருகிறார்.

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த வனிதாவிற்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருக்கிறது. அந்தகன் படத்தை தொடர்ந்து  மனோஜ் கார்த்தி காமராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் வைஜெயந்தி ஐபிஎஸ் என்ற திரைப்படத்தில் வனிதா நடித்து வருகிறார் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

கூட பழகிய நண்பர்களே முதுகில் குத்திய தருணம்.! 4.5 கோடி கடன்.. எதிர்நீச்சல் அடித்த நீலிமா ராணி.!

அதில் வனிதா காக்கி சட்டையை போட்டுக்கொண்டு கையில் துப்பாக்கியுடன் இருக்கும் போஸ்டர் இணையதளப்பக்கத்தில் வைரலாகி வருகிறது இதை பார்த்த ரசிகர்கள் சிரிப்பா அடக்க முடியல  எனக்கு ஒரு கமெண்ட் அடித்து வருகின்றனர் இதோ அந்த போஸ்டரை நீங்களே பாருங்கள்.

Vanitha
Vanitha