போண்டாமணி இறப்புக்கு வராத வடிவேலு.. நீ எல்லாம் மனுஷனா பொங்கிய ரசிகர்கள்.. உண்மையை உடைத்த சக காமெடி நடிகர்

Bondamani : சினிமா உலகில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தும் பல கலைஞர்கள் அடுத்தடுத்து உயிரிழந்து வருகின்றனர். விவேக், மயில் சாமியை தொடர்ந்து காமெடி நடிகர் போண்டாமணி சில தினங்களுக்கு முன்பு இயற்கை எய்தினார் ஏற்கனவே இவர் உடல்நிலை சீராக இல்லாததால் மருத்துவமனையில் அடிக்கடி டயாலிசிஸ் செய்து வந்த நிலையில் திடீரென வீட்டில் மயக்கம் போட்டு விழுந்துள்ளார்.

இதனை எடுத்து அவரை குரோம்பேட்டை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர் டாக்டர்கள் பரிசோதித்த போது அவர் இறந்து விட்டதாக கூறினர் இவருடைய இறப்பு செய்தியை கேட்டு பல பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார் வர முடியாதவர்கள் சமூக வலைதள பக்கங்களில் போண்டாமணி புகைப்படத்தை வெளியிட்டு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து வருகின்றனர்.

BIGGBOSS 7 : இந்த வாரம் நாமினேஷனில் மாட்டிய 6 போட்டியாளர்கள்.. தினேஷை வம்புக்கு இழுக்கும் போட்டியாளர்

போண்டாமணி பல நகைச்சுவை நடிகர்களுடன் நடித்தாலும் அதிகம் நடித்தது என்னவோ வடிவேலு தான் ஆனால் வடிவேலு போண்டமணியின் இறப்புக்கு வராதது பலரையும் அதிர்ச்சடைய செய்தது. வடிவேலு  பல காமெடி நடிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்களின் இறப்புக்கு கூட கலந்து கொள்வதே கிடையாது.

இது மக்கள் மத்தியில் பேசு பொருளாக தற்பொழுது மாறியது. இந்த நிலையில் வடிவேலு பற்றிய பிரபல காமெடி நடிகர் சாரா பாம்பு சுப்புராஜ் பேசியுள்ளார் அவர் சொன்னது என்னவென்றால்.. வடிவேலு போண்டாமணி இறப்புக்கு வரவில்லை என நாம் எல்லோரும் பேசுகிறோம்..

இந்த ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட டாப் 10 படங்கள்.. லிஸ்டில் இடம் பிடித்த இந்திய படங்கள்

ஆனால் அவர்  பலரது  இறப்பின் அஞ்சலியில் கூட அவர் கலந்து கொள்வது இல்லை கலந்து கொள்ளவும் மாட்டார் ஏன் என்று அதை நீங்கள் அவரை தான் கேட்க வேண்டும் ஆனால் கண்டிப்பாக அவர் கலந்து கொள்ள மாட்டார் என அடித்து கூறி உள்ளார் காமெடி நடிகர் சாரா பாம்பு சுப்புராஜ்