ஆறக்கடக்கிற வரைக்கும் அண்ணன்னு சொல்லுவீங்க.! ஆற கடந்தா யாருன்னு கேப்பிங்க.. 5 நடிகர்களை அடக்கி வைத்த வடிவேலு..!

vadivelu : நடிகர் வடிவேலு தமிழ் சினிமாவில் கவுண்டமணி செந்திலுக்குப் பிறகு காமெடியில் கொடி கட்டி பறந்தவர் ஆனால் தன்னுடைய வாயால் ஒரு சில நடிகர்களை பகைத்துக் கொண்டு சினிமாவில் இருந்து ஒதுக்கப்பட்டார் பின்பு மீண்டும் மாமன்னன் என்ற திரைப்படத்தின் மூலம் ரீ என்ட்ரி  கொடுத்து விட்ட இடத்தை பிடித்து விடலாம் என முயற்சி செய்தார். ஆனால் மாமன்னன் திரைப்படம் ஓரளவு ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்றாலும் காமெடியில் புகுந்து விடலாம் என நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தில் நடித்தார் அது வேலைக்காகவில்லை.

அதேபோல் வடிவேலு பற்றி சக நடிகர்கள் மோசமான விமர்சனங்களை வைத்துள்ளார்கள் அது மட்டும் இல்லாமல் சக நடிகர்கள் வளர்ந்தால் தன்னுடைய இடத்தை பிடித்து விடுவார்கள் என அவர்களை அடக்கி வைத்துள்ளார் வடிவேலு அந்த வகையில் வடிவேலுவாள் தங்களுடைய சினிமா கேரியரை தொலைத்த 5  நகைச்சுவை நட்சத்திரங்களை பற்றி இங்கே காணலாம்.

பெண்களை தொடாத ஒரே நடிகர்.. படத்தில் சொந்த குரலில் பேசாத பிரபலம்.. கோடி ரூபாய் கொடுத்தாலும் வில்லனாக நடிக்க மாட்டேன்

பாவா லட்சுமணன்  : நடிகர் வடிவேலுவுடன் பல திரைப்படங்களில் நடித்தவர் பாபா லட்சுமணன் இவர் மாயி திரைப்படத்தில் பேசிய வசனம் இன்று வரை பிரபலம் வாமா மின்னல் என்று கூறியவுடன் ஒரு பெண் வந்து விட்டு மின்னல் வேகத்தில் செல்வார். தொடர்ந்து நடித்து வந்த இவருக்கு சர்க்கரை வியாதி ஏற்பட்டு மருத்துவ செலவு கூட பணம் இல்லாமல் பலரின் உதவியை நாடி வந்தார் ஆனால் வடிவேலு இதுவரை எந்த உதவியும் செய்யவில்லை என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

முத்துக்காளை  : வடிவேலு அப்பொழுது நடித்த அனைத்து திரைப்படங்களிலும் முத்துக்களை நடித்திருந்தார் கிட்டத்தட்ட வடிவேலுவுடன் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ளார் அதேபோல் வடிவேலு உடன் முத்துக்காளை நடித்த பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நன்கு பிரபலம் காதை தொடும் காமெடி, வின்னர் பட காமெடி என இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் மறக்க முடியாத காமெடியாக இருந்து வருகிறது.

ஆனால் இவர் வடிவேலுவுடன் நடிக்கும் பொழுது வேறு எந்த திரைப்படத்திலும் நடிக்க கூடாது என வடிவேல் கண்டிஷன் போட்டதால் இவரால் வளரவே முடியவில்லை இதனை சமீபத்தில் ஒரு பேட்டியில் முத்துக்காளை கூறியிருந்தார்.

பட வாய்ப்பு ஏதுவும் கிடைக்காததால் மீண்டும் பழைய தொழிலுக்கே சென்ற அதிதி ஷங்கர்..! ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த புகைப்படம்

கிரேன் மனோகர் :  வடிவேலுவுடன் இணைந்து நடித்த பல நடிகர்களில் கிரேன் மனோகர் என்பவரும் ஒருவர் இவர் வடிவேலுவுடன் இணைந்து வின்னர், கச்சேரி, ஆரம்பம், ஐயா, மருதமலை என பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் இருவரும் இணைந்து வரும் காமெடி காட்சிகள் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும். இப்படி வடிவங்களுடன் பல திரைப்படங்களில் நடித்து நம்மளை சிரிக்க வைத்த கிரேன் மனோகர் வாடகை வீட்டில் வாழ்ந்து பட வாய்ப்பு இல்லாமல் தவித்து வந்தார் இவரும் இதுவரை வடிவேலு கண்டு கொள்ளவே இல்லை என தன்னுடைய ஆதங்கத்தை பேசியுள்ளார்.

ஜெயமணி: நடிகர் ஜெயமணி வேறு யாரும் கிடையாது வடிவேலுவின் சொந்தக்காரர் தான் வடிவேலு மூலம்தான் இவர் சினிமா துறையில் கால் தடம் பதித்தார் வடிவேலுவுடன் இணைந்து ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்த இவர் பலரின் பாராட்டை பெற்றதால் எங்கு தன்னைவிட உச்சத்தை அடைந்து விடுவாரோ என எண்ணி இவருக்கு வாய்ப்பு கொடுக்க மறுத்து விட்டார் வடிவேல் இவருக்கு மார்க்கெட்டே இல்லாமல் மொத்தமாக மூட்டை கட்ட வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

ரஜினியின் தில்லு முல்லு திரைப்படத்தில் நாயகியாக நடித்த மாதவியின் மறுபக்கம்…

டெலிபோன் ராஜ் : டெலிபோன் ராஜ் தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார் மேலும் வடிவேலுவுடன் இணைந்து நடித்த காட்சி ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அந்த வகையில் ஹோட்டலில் வடிவேலு சாப்பிட வருவார் அப்பொழுது பல லிஸ்ட் களை வடிவேலு சொல்லுவார் ஆனால் கடைசியாக அண்ணனுக்கு ஒரு ஊத்தாப்பம் என ஒரே வார்த்தையில் முடிப்பார் இன்று வரை இந்த காமெடி மீம்ஸ் மெட்டீரியலாக இருந்து வருகிறது இவரும் வடிவேலுவால் தன்னுடைய வாழ்க்கை போய்விட்டது என புலம்பி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.