ரஜினியின் தில்லு முல்லு திரைப்படத்தில் நாயகியாக நடித்த மாதவியின் மறுபக்கம்…

80s Actress Madhavi: சினிமாவில் ஏராளமான பிரபல நடிகைகள் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருவது வழக்கம் அப்படி நடிகை மாதவி ஆன்மீகத்தில் மிகவும் ஆர்வம் கொண்டிருந்த நிலையில் பிறகு தொழிலதிபர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் தற்பொழுது இவர் வாழ்க்கையின் மறுபக்கம் குறித்து பார்க்கலாம்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மற்றும் மலையாளம் என ஏராளமான மொழி திரைப்படங்களில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து 80 காலகட்டத்தில் கலக்கி வந்தவர் தான் நடிகை மாதவி. இவருடைய சிறந்த நடிப்பு வசீகரமான உடல் அமைப்பு போன்றவை ரசிகர்களை பெரிதளவிலும் கவர்ந்தது.

விடாமுயற்சி Pre Sales : மிகப்பெரிய தொகைக்கு விலை போன OTT, டிஜிட்டல் ரைட்ஸ்.. மொத்தம் இத்தனை கோடியா.?

இதன் மூலம் அடுத்தடுத்து படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளையும் பெற்றார். அப்படி தற்பொழுது வரையிலும் 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். மாதவி இவர் தமிழில் 1980ஆம் ஆண்டு வெளியான புதிய தோரணங்கள் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.

80s actress madhavi
80s actress madhavi

அதன் பிறகு சிவாஜி கணேசன் நடித்த அமர காவியம் படத்தில் அருணா என்ற முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இவ்வாறு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் சொல்லும் அளவிற்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை இந்நிலையில் தான் கே. பாலச்சந்திரன் இயக்கிய தில்லு முல்லு படத்தில் நாயகியாக நடித்தார். இந்த படம் சூப்பர் ஹிட் ஆனதும் ரஜினி, கமல் என முன்னணி நடிகர்களுக்கு ஜோடி போட்ட நடிக்க தொடங்கினார்.

ஒன்றாக சேர்ந்து அர்ச்சனா, விசித்ராவை டார்கெட் செய்த ஹவுஸ்மேட்ஸ்.! ஆட்டம் ஆரம்பமா.. புள்ள பூச்சிலாம் பேச ஆரம்பிச்சிடுச்சு

இவ்வாறு சினிமாவில் பிஸியாக இருந்ததால் திருமணமே வேண்டாம் என்று முடிவுடன் இருந்த மாதவி ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொண்டவர். அப்பொழுதுதான் சுவாமி ராமா நீ திருமணம் செய்து கொண்டு இல்லற வாழ்வில் ஈடுபட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். இந்நேரத்தில் அதே ஆசிரமத்திற்கு வந்த தொழிலதிபர் ரால்ப் ஷர்மாவை அறிமுகப்படுத்தியுள்ளார். பிறகு 1996ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்