ஒன்றாக சேர்ந்து அர்ச்சனா, விசித்ராவை டார்கெட் செய்த ஹவுஸ்மேட்ஸ்.! ஆட்டம் ஆரம்பமா.. புள்ள பூச்சிலாம் பேச ஆரம்பிச்சிடுச்சு

Bigg Boss season 7 Tamil today promo 2: பிக் பாஸ் நிகழ்ச்சியில் அனைத்து போட்டியாளர்களும் கடுமையாக விளையாடி வரும் நிலையில் எந்த ஒரு வேலையும் செய்யாமல் மிச்சர்ஸ் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் விக்ரம், அக்ஷயா இருப்பதிலேயே போரிங் கண்டெஸ்டாண்டாக கருதப்படுகின்றனர்.

இருந்தாலும் ஹவுஸ் மேட்ஸ்கள் இவர்களை டார்கெட் செய்யாமல் விசித்ரா அர்ச்சனாவை டார்கெட் செய்து வருகின்றனர். ஏற்கனவே மாயா கேப்டன்சியில் விசித்ரா, அர்ச்சனா இவர்களுக்கு எதிராக பலவற்றை செய்ததால் கமல் கழுவி ஊற்றினார். எனவே இந்த வாரம் முடிந்த வரையிலும் சூனியக்காரி மாயா மற்றும் பூர்ணிமா அமைதியாக இருக்க நினைத்தனர். இருந்தாலும் இவர்களுடைய உண்மையான கேரக்டர் வெளியில் வந்து கொண்டே இருக்கிறது.

அஜித் ஒரு அற்புதமான மனிதர்.. அசல் ஷூட்டிங் ஸ்பாட்டில் அவர் செய்ததை பார்த்து வியந்து விட்டேன் – நடிகர் சம்பத்ராஜ் பேச்சு.!

அப்படி தொடர்ந்து தினேஷ், அர்ச்சனா, விசித்ரா மூன்று பேரையும் டார்கெட் செய்வதை சூனியக்காரி இருவரும் வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இந்நிலையில் இந்த வாரம் ஆண் போட்டியாளர்கள் பெண் போட்டியாளர்கள் போலவும், பெண் போட்டியாளர்கள் ஆண் போட்டியாளர்கள் போலவும் கேரக்டர் மாறி நடித்து வந்தனர் இதில் மணி கோல்டு ஸ்டார் வென்றார்.

இன்றைய முதல் ப்ரோமோவில் நிக்சன் ஐஷூ வெளியேறியதற்கு காரணம் நீங்கள் தான் என விசித்ராவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனை அடுத்து இரண்டாவது ப்ரோமோவில் இந்த வாரம் முழுவதும் சிறப்பாக பங்கு பெறாத இரண்டு வஸ்டு பெர்ஃபார்மர்ஸ்ச செலக்ட் பண்ணி ஜெயிலுக்கு அனுப்புமாறு பிக் பாஸ் தெரிவிக்கிறார்.

அஜித் ஒரு அற்புதமான மனிதர்.. அசல் ஷூட்டிங் ஸ்பாட்டில் அவர் செய்ததை பார்த்து வியந்து விட்டேன் – நடிகர் சம்பத்ராஜ் பேச்சு.!

முதலில் கேப்டன் ஆன தினேஷ் அர்ச்சனா என கூற இவரை தொடர்ந்து நிக்சன், ரவீனா, விஷ்ணு, விக்ரம், கூல் சுரேஷ், பூர்ணிமா, கானா பாலா போன்றவர்களும் அர்ச்சனா, விசித்ரா என்று கூறுகிறார்கள். இதற்கு விசித்ரா எல்லாம் ஒன்னா சேர்ந்து பர்ஸ்னலா பண்ணி இருக்கீங்க என்று கூறிவிட்டு ஸ்மால் பாஸ் வீட்டிற்கு சென்றவுடன் கேமராவை பார்த்து விசித்ரா 2 பாக்கப் போறீங்க என்று கூற அர்ச்சனாவும் அதற்கு ஆமாம் என்று சொல்கிறார்.