அஜித் ஒரு அற்புதமான மனிதர்.. அசல் ஷூட்டிங் ஸ்பாட்டில் அவர் செய்ததை பார்த்து வியந்து விட்டேன் – நடிகர் சம்பத்ராஜ் பேச்சு.!

Ajith : தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர் அஜித்குமார் இவர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் அந்த வகையில் துணிவு படத்தை தொடர்ந்து மகிழ் திருமேனிவுடன் முதன் முறையாக கூட்டணி அமைத்து விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார்.

லைகா தயாரிக்க, அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளார் படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் வெளிநாட்டில் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது அடுத்த கட்ட ஷூட்டிங் துபாய், அபுதாபி போன்ற இடங்களில் நடக்கும் என பேச்சுக்கள் வெளி வருகின்றன. விடாமுயற்சி படம் முழுக்க முழுக்க ஆக்சன் திரைப்படமாக உருவாகி வருகிறது.

சிம்ரனுக்கு முன்பு வாலி படத்தில் இவர்தான் நடிக்கவேண்டியது… பல வருடம் கழித்து வெளியான ரகசியம்

]அஜித்துடன் இணைந்து ரெஜினா, அர்ஜுன், த்ரிஷா மற்றும் பல டாப் நட்சத்திர நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர்.  திரை உலகில் வெற்றி நடிகராக ஓடும் அஜித் நிஜத்தில் அனைவரின் மீதும் பண்பும் பாசமும் மரியாதையும் வைத்திருக்கிறார். அஜித் கூட இருந்தவர்கள் அவரைப் பற்றிய பெருமையாகவே பேசி வருகின்றனர்.

அதை நாம் பார்த்து வருகிறோம் அதுபோல பிரபல நடிகர் சம்பத்ராஜ் சமீபத்திய பேட்டி ஒன்றில் அஜித் பற்றி பேசி உள்ளார் அவர் சொன்னது என்னவென்றால்.. அசல் படத்தின் ஷூட்டிங் பிரான்ஸ்ல சூட்டிங் போய்க் கொண்டிருந்தப்ப.. சமீரா ரெட்டி இந்தியா போயிட்டு வருகிறேன் என கூறினார். உடனே அஜித் நான் காரை ஓட்டுகிறேன் என கூறினார்.

நீ இல்லாத நேரத்தில் உன் நினைவுகளை தவிர வேறு எதுவும் இல்லை.. பிரபு, குஷ்பூ ஜோடியில் வெளியான 10 படங்கள்.!

அவருடன் நானும், இன்னொருவர் மற்றும் சமீரா ரெட்டி அனைவரும் ஏர்போர்ட்டுக்கு போனோம். உள்ளே போய் செக்கிங் முடிந்து சமீரா ரெட்டி போடிங் பாஷை காட்டினார். அதன் பிறகு அஜித் சமீரா ரெட்டி அம்மாவுக்கு போன் பண்ணி மகளை பத்திரமாக ஏர்போர்ட்டில் விட்டோம் பயப்படாதீர்கள்.

இந்தியாவுக்கு வந்து விடுவார்கள் என அவருக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் பேசினார் அஜித் அப்படி செய்ய வேண்டிய அவசியம் இல்லை.. ஒரு பெண் வெளியே எங்கேயாவது சென்று விட்டால் அவருடைய அப்பா அம்மா பயப்படுவார்கள் பொண்ணு பத்திரமாக வீட்டுக்கு வர வேண்டுமென நினைப்பார்கள். அதைப் போல் தான் நம்மை நம்பி வந்த சமீரா ரெட்டி பத்திரமாக அனுப்பி வைக்க வேண்டும் என அஜித் அப்படி நினைத்தார் என பெருமையாக கூறினார்.