நீ இல்லாத நேரத்தில் உன் நினைவுகளை தவிர வேறு எதுவும் இல்லை.. பிரபு, குஷ்பூ ஜோடியில் வெளியான 10 படங்கள்.!

Khushbu :  80, 90 -களில் பல்வேறு படங்களில் ஜோடி போட்டு நடித்து மக்கள் மனதில்  சூப்பர் ஜோடி என்ற பெரியரை பெற்றவர்கள் பிரபு மற்றும் குஷ்பூ.. இருவரும் சேர்ந்து நடித்த படங்களில் சில முக்கியமான படங்களை பற்றி பார்ப்போம்..

1.  தர்மத்தின் தலைவன் : எஸ் டி முத்துராமன் இயக்கிய இந்த திரைப்படத்தில் ரஜினி மற்றும் பிரபு இருவரும் கதாநாயகனாக நடித்திருந்தனர்.. இதில் ரஜினிக்கு ஜோடியாக சுகாசினியும், பிரபுவுக்கு ஜோடியாக குஷ்பூவும் நடித்திருந்தனர். இந்த படத்தில் இளையராஜா இசையில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு பாடல்களுமே மிக அழகாக இருக்கும்..

மாமன்னன் தந்த வெற்றி.. சம்பளத்தை கிடுகிடுவென உயர்த்திய கீர்த்தி சுரேஷ்.!

2. மை டியர் மார்த்தாண்டன் : 1990 – ல் பிரதாப் போத்தன் இயக்கிய இந்த திரைப்படத்தில் பிரபு மற்றும் குஷ்பூ முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இவர்களுடன் சேர்ந்து கவுண்டமணி, கோவை சரளா போன்றோர் நடித்தனர். படம் நகைச்சுவை படமாகும் இந்த படத்தில் கமலஹாசன் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..படம் நன்றாக ஓடியது

3. சின்ன தம்பி : பிரபு, குஷ்பூ சேர்ந்து நடித்த மூன்றாவது படமான சின்னத்தம்பி திரைப்படத்தை வாசு இயக்கியிருந்தார்.. பிரபு படங்களிலேயே அதிக நாள் ஓடிய திரைப்படம் என்ற சாதனையையும் சின்னத்தம்பி பெற்றது.. இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார் பாடல்கள் பெரிய ஹிட் அடித்தது என்பது குறிப்பிட தக்கது.

ஜப்பான் படத்தை மண்டையில் தட்டி ஓடவிட்ட ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்.. முதல் வாரத்தில் அள்ளிய வசூல் எவ்வளவு தெரியுமா.?

4. கிழக்கு கரை : சின்னதம்பி படத்தை இயக்கி மாபெரும் வெற்றி கண்ட வாசு இரண்டாவது முறையாக பிரபு மற்றும் குஷ்புவை வைத்து  இயக்கிய இந்த திரைப்படம் சுமாரான வரவேற்பை கண்டது..

5. பாண்டித்துரை :  மனோஜ் குமார் இயக்கிய பாண்டித்துரை திரைப்படத்திலும் குஷ்பூ மற்றும் பிரபு ஜோடி சேர்ந்தனர் இவர்களுடன் இணைந்து கவுண்டமணி, ராதாரவி, சில்க் ஸ்மிதா போன்ற பல நட்சத்திரங்கள் நடித்த இந்த திரைப்படமும் சுமாரான வரவேற்பை கண்டது.. இந்த படங்களை தொடர்ந்து நாளைய செய்தி, மறவன், தர்மசீலன், உத்தமராசா, சின்ன வாத்தியார் போன்ற பல்வேறு படங்களில் பிரபு மற்றும் குஷ்பூ  ஜோடி சேர்ந்திருக்கின்றனர்.