ஜப்பான் படத்தை மண்டையில் தட்டி ஓடவிட்ட ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்.. முதல் வாரத்தில் அள்ளிய வசூல் எவ்வளவு தெரியுமா.?

Jigarthanda DoubleX  : விடுமுறை மற்றும் விசேஷ நாட்களில் டாப் ஹீரோக்களின் படங்கள் களம் இறங்குவது வழக்கம் அந்த வகையில் கடந்த தீபாவளியை முன்னிட்டு கார்த்தியின் ஜப்பான், ராகவா லாரன்ஸ், எஸ்ஜே சூர்யா நடிப்பில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், ரைய்டு ஆகிய படங்கள் மோதின.

இதில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் நல்ல வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது. படத்தில் எஸ்.ஜே சூர்யா, ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து நிமிஷா சஜயன், சைன் டாம் சாக்கோ, பாவா செல்லதுரை, இளவரசு, சத்யன், அரவிந்த் ஆகாஷ் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர்.

லியோ மோசமான விமர்சனம்.. தம்பி உன் LCU- லாம் நீயே வச்சிக்கோ கட்டளை இட்ட சன் பிக்சர்.. தலைவர் 171க்கு நாள் குறித்த லோகேஷ்..

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் கதை என்னவென்றால்.. மிகப்பெரிய தாதாவாக இருக்கும் ராகவா லாரன்ஸ் போட்டு தள்ள எஸ் ஜே சூர்யாவை பயன்படுத்துகின்றனர். ராகவா லாரன்ஸ்- க்கு  சினிமாவில் நடிக்க ஆர்வம் இருப்பதை தெரிந்து கொண்ட எஸ் ஜே சூர்யா பின் இயக்குனர் அவதாரம் எடுத்து உள்ளே போகிறார்.

அதன் பிறகு நடக்கும் ஆக்சன் எமோஷனல் தான் படத்தின் கதை படம் சிறப்பாக இருந்ததால் தொடர்ந்து ஹவுஸ்ஃபுல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது அதன் காரணமாக ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்  படத்தின் வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருக்கின்றன.

படங்களில் நடிக்க சின்னத்திரை நடிகைகளுக்கு வாய்ப்பு கிடைக்க காரணம் இதுதான்.! தயாரிப்பாளர்களுக்கு லாபம்.. பிரபலம் பேட்டி

முதல் ஐந்து நாளில் 30 கோடி வசூல் செய்த நிலையில் முதல் வார முடிவில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் உலகம் முழுவதும் எவ்வளவு வசூல் அள்ளி உள்ளது என்பது குறித்து தகவல் கிடைத்திருக்கிறது அதன்படி பார்க்கையில் 45 கோடிக்கு மேல் வசூல் அள்ளி உள்ளதாம் தமிழகத்தில் மட்டுமே சுமார் 30 கோடி வரை வசூல் வந்திருக்கும் என சொல்லப்படுகிறது.