லியோ மோசமான விமர்சனம்.. தம்பி உன் LCU- லாம் நீயே வச்சிக்கோ கட்டளை இட்ட சன் பிக்சர்.. தலைவர் 171க்கு நாள் குறித்த லோகேஷ்..

Thalaivar 171 : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தற்பொழுது ஞானவேல் ராஜா இயக்கத்தில் தலைவர் 170 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் அவர்களுடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இணைய இருக்கிறார் இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

அதே போல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வசூல் ரீதியாக 600 கோடிக்கு மேல் வசூல் செய்து மாபெரும் வெற்றி திரைப்படமாக உரு மாறியது அது மட்டும் இல்லாமல் படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் படத்தின் வெற்றியை தொடர்ந்து அனைவருக்கும் பரிசுகளை வாரி வழங்கினார்கள்.

படங்களில் நடிக்க சின்னத்திரை நடிகைகளுக்கு வாய்ப்பு கிடைக்க காரணம் இதுதான்.! தயாரிப்பாளர்களுக்கு லாபம்.. பிரபலம் பேட்டி

அதேபோல் லோகேஷ் கனகராஜ் விஜயை வைத்து லியோ என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் ஜெயிலர் திரைப்படத்தின் வசூலை முறியடிக்கும் என பலரும் கூறி வந்த நிலையில் லியோ திரைப்படத்தின் விமர்சனம் கொஞ்சம் மோசமாக  வெளியானது இதனால் லோகேஷ் கனகராஜ் அவர்களும் இதனை நான் ஏற்றுக்கொள்கிறேன் என வெளிப்படையாக கூறியிருந்தார்.

அதே போல் இனி வரும் திரைப்படங்களில் இது மாதிரி விமர்சனம் வராது எனவும் அவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ரஜினியுடன் இணைந்து பணியாற்றும் 171 வது திரைப்படத்தின் கதையை விரைவில் எழுத இருப்பதாக லோகேஷ் கனகராஜ் அவர்கள்  தெரிவித்துள்ளார். இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் அவர்கள் காளிதாஸ் ஜெயராம் நடித்துள்ள அவள் பெயர் ரஜினிகாந்த் என்ற திரைப்படத்தின் டிரைலர் விழாவில் வெளியிட்டார்.

ஐஸ்வர்யா ஸ்கிப்பிங் விளையாடுவதை பார்த்து சித்ராதேவி, கௌதமை திட்டி தீர்க்கும் குடும்பம் – ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோட்

அப்பொழுது பேசிய லோகேஷ் கனகராஜ் அவர்கள் தலைவர் 171 வது திரைப்படத்திற்கான கதையை அடுத்த வாரம் முதலில் இருந்து எழுத இருக்கிறேன் லியோ திரைப்படத்தின் ரிலீஸ் பணிகள் இருந்ததால் தலைவர் 171 கதையை முழுமையாக முடிக்கவில்லை வரும் வாரத்தில் இருந்து தலைவர் 171  வது திரைப்படத்தின் கதையை முழுமூச்சாக எழுத இருக்கிறேன் என கூறியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் தலைவர் 171 வது திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் கமலை வைத்து இயக்கிய விக்ரம் திரைப்படம் 500 கோடியை எட்டியது அதனைத் தொடர்ந்து விஜயை வைத்து லியோ திரைப்படம் சுமார் 600 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.

எவ்வளவுதான் சர்ச்சை இருந்தாலும் பணம் சம்பாதிப்பதில் குறியாக இருந்த சிவ கார்த்திகேயன்.! சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா.?

மேலும் சன் பிக்சர் நிறுவனம் லோகேஷ் கனகராஜ் அவர்களிடம் பேசி உள்ளது அப்பொழுது லியோ விமர்சனத்தை மனதில் வைத்துக் கொண்டு கதையை ரெடி பண்ணுங்கள் என சன் பிக்சர் கூறியதாக தகவல் கிடைத்துள்ளது. அதுமட்டுமில்லாமல் லோகேஷ் கனகராஜ் இயக்கும் தலைவர் 171 வது திரைப்படம் LCU  வில் அமையாமல் ரஜினி ரசிகர்களுக்கு பிடித்த திரைப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது..