பட வாய்ப்பு ஏதுவும் கிடைக்காததால் மீண்டும் பழைய தொழிலுக்கே சென்ற அதிதி ஷங்கர்..! ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த புகைப்படம்

Aditi Shankar : சினிமா உலகில் சிலர் கஷ்டப்பட்டு ஆடிஷன் சென்று கிடைக்கின்ற சின்ன சின்ன வாய்ப்புகளை பயன்படுத்தி அதன் மூலம் தனது திறமையை வெளிப்படுத்தி  பிரபலமாகின்றனர்.. ஒரு கட்டத்தில் ஹீரோயின்னாக மாறுகின்றனர்.

ஆனால் இதற்கு மாறாக சிலர் அவர்களது அப்பா, அம்மாவின் செல்வாக்கை பயன்படுத்தி ஈசியாக சினிமாவில் நுழைந்து விடுகின்றனர்.. அதில் ஒருவர் தான் நடிகை ஆதிதி ஷங்கர்.. பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இளைய மகள் தான் அதிதி ஷங்கர் இவர் டாக்டர் படிப்பை முடித்திருந்தாலும் சினிமா மேல் கொண்ட ஆசையால் அவரது அப்பாவை வைத்து ஈசியாக சினிமாவில் நுழைந்து விட்டார்.

ரஜினியின் தில்லு முல்லு திரைப்படத்தில் நாயகியாக நடித்த மாதவியின் மறுபக்கம்…

அந்த வகையில் கார்த்தியின் விருமன் படத்தில் ஹீரோயினாகவும், சிங்கராகவும் அறிமுகமாகி இருந்தார்.. இந்த படத்தில் இவரது நடிப்பு, நடனம் போன்றவை வெகுவாக ரசிகர்களை கவர்ந்து இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமும் உருவாகினர்.. இரண்டாவதாக சிவகர்த்திகேயனின் மாவீரன் திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

இந்த படமும் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. அதை தொடர்ந்து இதுபோன்று டாப் நடிகர்களின் படங்களை கைப்பற்றி நடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் பட வாய்ப்பு அதிகம் கிடைக்காததால் மீண்டும் அதிதி ஷங்கர் டாக்டர் தொழிலிலே இறங்கிவிட்டார் என சொல்லப்படுகிறது..

விடாமுயற்சி Pre Sales : மிகப்பெரிய தொகைக்கு விலை போன OTT, டிஜிட்டல் ரைட்ஸ்.. மொத்தம் இத்தனை கோடியா.?

இரண்டு வருடங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள பிரபல மருத்துவக் கல்லூரியில் டாக்டர் படிப்பை முடித்த அதிதி ஷங்கர் தற்பொழுது டாக்டர் வேலைக்கு சென்று விட்டாராம் அதனை உறுதிப்படுத்தும் வகையில் அதிதி ஷங்கர் டாக்டர் உடையில் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது..  இதை பார்த்த ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியில் இருந்து வருகின்றனர்.

Actress Aditi Shankar
Actress Aditi Shankar
Actress Aditi Shankar
Actress Aditi Shankar
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்