Vaali Movie : நடிகை ஜோதிகாவுக்கு முதலில் கொடுக்கப்பட்ட கதாபாத்திரம் இதுவா.? அவரே கூறிய உண்மை

Jyothika :  90 களில் கனவு கன்னியாக வந்த ஜோதிகா. வாலி படத்தில் நடித்து அறிமுகமானார் அதன் பிறகு அஜித், விஜய், சூர்யா, ரஜினி, கமல் என டாப் ஹீரோகளுடன் படம் பண்ணி தன்னுடைய மார்க்கெட்டை மிகப்பெரிய அளவில் உயர்த்தி கொண்ட இவர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் அதன் பிறகு சில வருடங்கள் சினிமாவில் நடிக்கவே இல்லை..

ஆனால் இவரை சினிமாவை விடவே இல்லை துரத்திக் கொண்டு இருந்ததால் 36 வயதினிலே படத்தில் நடித்து மீண்டும் என்ட்ரி கொடுத்தார் தொடர்ந்து பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடித்து வருவதால் ஜோதிகாவின் மார்க்கெட்டு மீண்டும் உச்சத்தை எட்டி உள்ளது கைவசம் ஏகப்பட்ட படங்கள் இருக்கின்றன.

ஏழை என்றால் என்ன வேணாலும் பேசுவீங்களா.. விஜயா போட்ட மொத்த நகையையும் மூஞ்சில் விட்டெறிந்த மீனா – சிறகடிக்க ஆசை ப்ரோமோ

இப்படிப்பட்ட ஜோதிகா ஹிந்தி படத்தில் ஹீரோயின்னாக நடித்துவிட்டு தமிழில்  வாலி படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்து அறிமுகமானார். இது குறித்து ஜோதிகாவிடம் கேட்கும் பொழுது அவர் கூறியது என்னவென்றால்.. வாலி படத்தில் கதாநாயகியாக நடிக்க வேண்டியது நான் தான்..

எஸ் ஜேசூர்யா என்னை கதாநாயகி ரோலில் நடிக்க தான் கேட்டார் அதுதான் என்னுடைய அறிமுக படமாக இருந்தது ஆனால் நடுவில் ஹிந்தி படம் ஒன்று வந்துவிட்டது. இரண்டு படத்திற்கும் கிளாஷ் ஆனது அதனால் நான் அந்த படத்தை விட்டு வெளியே வந்து விட்டேன்.

2023 – ல் அதிக நெகட்டிவ் கமெண்டுகளை வாங்கிய 5 படங்கள்.. சூப்பர் ஸ்டார் பெயரை டேமேஜ் செய்த சிஷ்யன்

மீண்டும் எஸ் ஜே சூர்யா என்னிடம் வந்து வாலி படத்தில் இந்த சின்ன கெஸ்ட் ரோல் பண்ணுவீங்களா என்று என்னிடம் கேட்டார் நான் அந்த படத்தை விட்டு அப்படியே வந்திருக்கக் கூடாது அது எனது தப்புதான் கண்டிப்பாக இந்த ரோல் பண்ணி தரேன் என்று நடித்தது தான் வாலி அந்த சின்ன கதாபாத்திரம் என்றும் பதிலளித்துள்ளார் ஜோதிகா.