ஏழை என்றால் என்ன வேணாலும் பேசுவீங்களா.. விஜயா போட்ட மொத்த நகையையும் மூஞ்சில் விட்டெறிந்த மீனா – சிறகடிக்க ஆசை ப்ரோமோ

Siragadikka Aasai serial promo : சிறகடிக்க ஆசை சமீபத்திய எபிசோடுகளில் ஸ்ருதி ரூம் இல்லாமல் மொட்டை மாடியில் தூங்கினார் என்று தப்பாக புரிந்து கொண்டு சுதா வீட்டிற்கு வந்து சண்டை போட்டார்.. பிறகு அண்ணாமலை நாங்க தான் எங்க ரூம ரவி ஸ்ருதிக்கு கொடுத்திருக்கோமே என்ற உண்மையை சொன்னதும் சுதா சமாதானம் ஆகினார்.

பிறகு மீனா ரவி சுருதிக்காக சமைத்து வைத்திருந்தார் ஆனால் அவர்கள் வெளியேவே சாப்பிட்டு வந்துட்டேன் என்று சொன்னதும் முத்து உங்களுக்காக கஷ்டப்பட்டு அவள் சமைச்சா நீங்க எப்படி வெளியே சாப்பிட்டு வரலாம் என்று குடித்துவிட்டு ரவி மற்றும் ஸ்ருதியிடம் வம்பு இழுத்தார்.. இதனால் மீனா முத்துவிடம் இதுக்கு முன்னாடி ரோகினி முன்னாடி மட்டும் தான் என் அசிங்கப்படுத்துனீங்க..

2023 – ல் அதிக நெகட்டிவ் கமெண்டுகளை வாங்கிய 5 படங்கள்.. சூப்பர் ஸ்டார் பெயரை டேமேஜ் செய்த சிஷ்யன்

நீங்க இப்ப புதுசா வந்த பொண்ணு முன்னாடியும் குடிச்சிட்டு வந்து சண்டை போடுறீங்க இது எனக்கு தான் அவமானமா இருக்கு என்று வருத்தப்பட்டார். இந்நிலையில் சிறகடிக்க ஆசை சீரியல் ப்ரோமோ வெளியாகியிருக்கிறது.. அதில் சுதா அண்ணாமலை வீட்டிற்கு வந்து இதுல 50 பவுன் நகை இருக்கு வச்சுக்கோங்க என்று விஜயாவிடம் கொடுக்கிறார்.

பிறகு அண்ணாமலை இது வரதட்சணை வாங்குற மாதிரி இருக்கு என்று சொல்ல சுதா உங்க மூத்த மருமகளும் வரும்போது நிறைய நகை போட்டு வந்திருப்பாங்க இல்ல உங்க ரெண்டாவது மருமகளுக்கு என்ன செஞ்சாங்க என்று கேட்க உடனே விஜயா மீனாவை அவ எங்க நகை போட்டு வந்தா அவளுக்கு நாங்க தான் நகை செஞ்சு போட்டு கூட்டி வந்தோம் என்று சொல்ல..

அஜித்துடன் நடித்த எஸ். ஜே. சூர்யா எந்த மூவி தெரியுமா.? வைரலாகும் புகைப்படம்

பிறகு மீனா விஜயாவிடம் ஏழை வீட்டில் பிறந்தா அவ்வளவு தப்பா என்று கேட்க பின்ன உங்க அப்பா உனக்கு நகை சேர்த்து வச்சுட்டா போனாரு எனக் கேட்பதும் மீனாவால் தாங்கிக் கொள்ள முடியாமல் விஜயா போட்ட தாலி செயினை கழட்டி கொடுக்கிறார்..

உடனே விஜயா தாலி, குண்டு எல்லாமே நாங்க தான் போட்டோம் என்று சொல்ல மீனா அதையும் கழட்டி கொடுத்துவிட்டு கழுத்தில் மஞ்சள் கயிறு போட்டுக்கொண்டு  இதுக்கு மேல என் உடம்புல நகண்ணு ஒன்னு ஏறுனா அது என்னோட புருஷன் சம்பாதிச்சதா தான் இருக்கணும் என்று சொல்லும் ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றன.